காளான் ஒரு Superfood தெரியுமா? - மஷ்ரூம் புலாவ் ரெசிப்பியை நிறைய பேரு கூகுள் பண்றாங்க..!
உணவு பிரியர்களுக்கு ஸ்பெஷல் உணவு என்றால் முதலில் நியாபகத்திற்கு வருவது, இந்த மஷ்ரூம்தான். மிகவும் பிரபலமான இந்த மஷ்ரூம் புலாவ் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.
தினமும் ஒரே மாதிரி உணவை எடுத்து அலுத்துப்போயிருந்தால் இந்த உணவை எடுத்துக் கொள்ளலாம். ஒரு பெரிய மாற்றமாக இருக்கும். சைவ உணவு பிரியர்களுக்கு ஸ்பெஷல் உணவு என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது, இந்த காளான்தான். காளான் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கமுடியுமா என்ன? பெரும்பாலானவர்களுக்கு பிடித்த இந்த ரெசிபி ரொம்ப ஈசிதான் எப்படி செய்யுறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க..
தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி / அரிசி - 1 கப்
குடை மிளகாய் - 1/2 (க்யூப்)
காளான் - 10 ( மெல்லியதாக நறுக்கியது )
வெங்காயம் - 1 ( சிறியதாக நறுக்கியது )
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டாணி - 1/2 கப்
கிராம்பு - 1
மிளகு - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை - 1
கிராம்பு - 3/4
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் அளவு
பூண்டு - 2
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- காளானை தனித்தனியாக நறுக்கி 15 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். அதை தனியாக வைத்துக்கொள்ளவும்.
- குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில், மிளகு, பட்டை, சீரகம், கிராம்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் ,
- அதில் வெங்காயம் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்,
- இதனுடன், இஞ்சி பூண்டை நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு, வெங்காயத்துடன் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
- நன்றாக வதக்கிய பிறகு, அதனுடன், காளான்களை சேர்த்துக்கொள்ளவும். இதை ஓரிரு நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
- ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்துவிட்டு இதனுடன் சேர்க்கவும்.
- பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்.
- இதில் பட்டாணி, குடை மிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வைக்கவும்.
- இதில் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அதில் மூடி வைக்கவும்.
15 நிமிடங்கள் நன்றாக வெந்தபிறகு எடுத்து, தயிர் வெங்காய பச்சடியுடன் பரிமாறலாம். உங்களுக்கு நீங்களே ஒரு ட்ரீட் கொடுக்க ஆசைப்பட்டீங்கன்னா, மஷ்ரூம் புலாவ் ஒரு பெஸ்ட் சாய்ஸ்