Monsoon Diet Tips: வந்துவிட்டது மழைக்காலம்.. உணவில் கவனம் தேவை.. இங்கே சில தகவல்கள்!
மழை பெய்ய ஆரம்பிச்சாவே, சூட பஜ்ஜி, டீ, இளையராஜா பாடல் தான் எல்லாத்துக்கும் நியாபகம் வரும். இது போன்ற நேரங்களில் அனைத்து உணவையும் எடுத்து கொள்ளக் கூடாது.
மழை பெய்ய ஆரம்பிச்சாவே, சூட பஜ்ஜி, டீ, இளையராஜா பாடல் தான் எல்லாத்துக்கும் நியாபகம் வரும். இது போன்ற நேரங்களில் அனைத்து உணவையும் எடுத்து கொள்ளக் கூடாது. பொதுவாக, மழை காலத்தில் நிறைய தொற்று நோய்கள் வரும். குறிப்பாக மழை காலத்தில் சளி,காய்ச்சல் , கொசுவினால் வரும் தொற்று , உணவில் இருந்து வரும் நோய் தொற்று என பல முறைகளில் நோய் தொற்று வரும். இது வராமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்காக உணவில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும். நாம் தினம் எடுத்து கொள்ளும் உணவுகளை கூட மழை காலத்தில் எடுத்து கொள்ள முடியாத சூழல் உருவாகும்.
என்ன உணவுகளை எடுத்து கொள்ளக் கூடாது ?
- கீரைகள் - தினம் கீரைகள் எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்பட்டாலும், மழை காலத்தில் இதை தவிர்ப்பது நல்லது. இந்த கீரைகள் ஈரப்பதம் நிறைந்து இருப்பதால், இதில் தொற்றுகள் வளர வாய்ப்பிருக்கிறது.அதனால் இதை தவிர்ப்பது நல்லது. மழை காலத்தில் மட்டும் கீரைகளை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் கீரைகள் எடுத்து கொள்ளலாம்.
2.எண்ணையில் பொறித்த உணவுகள் - இந்த மழை காலத்திற்கு பஜ்ஜி, பக்கோடா , வடை என சூடாக சாப்பிட்டால் மிகவும், சுவையாகவும், இருக்கும். இது அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் செரிமான பிரச்சனைகள் வரும். வயிறு உப்புசம் போன்று இருக்கும். இதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. அளவோடு எடுத்து கொண்டு மழை காலத்தில் கொண்டாடி கொள்ளலாம்.
- தண்ணீர் - குழாயில் வரும் தண்ணீரை அப்டியே குடிக்க வேண்டாம். இது நீரில் இருந்து வரும் தொற்றுகள் வர வாய்ப்பு இருக்கிறது. மழை காலத்தில் தண்ணீரை சூடாக்கி, வடிகட்டி ஆற வைத்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
எந்த உணவுகளை எடுத்து கொள்ளலாம்
- மசாலா டீ - சூடான மசாலா டீ குடிப்பது மிகவும் நல்லது. இதில் சேர்க்கும் துளசி, இஞ்சி, ஏலக்காய் போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். மழை காலத்தில் இது போன்ற மசாலா டீ சூடாக எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
2. வேகவைத்த காய்களை உண்பது - காய்களை சாலட் களாக எடுத்து கொள்ள பழக்கபட்டவர்கள் இந்த மழை காலத்தில் வேகவைத்து எடுத்து கொள்வது நல்லது. காய்களில் இருக்கும் ஈரப்பத்தினால், தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது.அதனால் முடிந்த வரை மழை காலத்தில் காய்களை வேக வைத்து எடுத்து கொள்வது நல்லது.
3. மசாலா பொருள்கள் - அன்றாட உணவில், மிளகு, இஞ்சி, மஞ்சள், கிராம்பு, சீரகம் போன்றவற்றை எடுத்து கொள்வது, உடலுக்கு நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, தொற்றில் இருந்து பாதுகாக்கும்.