Health Tips: மன ஆரோக்கியத்தை மேம்படுத்த மெக்னீசியம் எப்படி உதவும்? நிபுணர்கள் சொல்வது என்ன?
Health Tips: மெக்னீசியம் நிறைந்த உணவுகள் மன ஆரோக்கியத்திற்கு எப்படி உதவும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.
![Health Tips: மன ஆரோக்கியத்தை மேம்படுத்த மெக்னீசியம் எப்படி உதவும்? நிபுணர்கள் சொல்வது என்ன? Magnesium supplements can alleviate anxiety and regulate cortisol here's how: Neurologist explains Health Tips: மன ஆரோக்கியத்தை மேம்படுத்த மெக்னீசியம் எப்படி உதவும்? நிபுணர்கள் சொல்வது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/13/85ff930a656f97973a58c0724269d7eb1720852314239333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மன அழுத்தம்,மன சோர்வு ஆகியவற்றை சரிசெய்ய மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடலாம் என்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மன அழுத்தத்தை சரிசெய்ய மெக்னீசியம் எப்படி உதவும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதை காணலாம்.
மெக்னிசீயம் உள்ள உணவுகள்:
மெக்னீசியம் உள்ள உணவுகள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். பயோகெம்மிகள் ப்ராசர்ஸ், மூளையில் உள்ள நியுரோடிரான்மிட்டர் சீராக இயங்க உதவும். இதனாலேயே மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் Mood என்ஹான்ஸ் செய்ய உதவுகிறதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சரிவிகித உணவும் சீரான உடற்பயிற்சியும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு தேவை. இன்றைய அவரச வாழ்க்கை சூழலில் மன அழுத்தம், மன சோர்வு உள்ளிட்டவற்றை நிர்வகிப்பது சவாலாக உள்ளது. அதை சரிசெய்ய கவனமுடன் சாப்பிட வேண்டும். மெக்னீசியம் மன ஆரொக்கியத்தை மேம்படுத்த எப்படி உதவுகிறது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஷர்மிளா தெரிவிப்பதை காணலாம்.
கீரை, பாதாம், முந்தரி, வேர்க்கடலை, அவகேடோ,பீன்ஸ், கிட்னி பீன்ஸ், டார்க் சாக்லேட், குயொனோவா, முழு தானியங்கள், தயிர் உள்ளிட்டவைகளில் மெக்னீச்யம் அதிகம் உள்ளது.
நியூரோட்ரான்ஸ்மிட்டர் சீரான இயக்கம்:
மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர் சீராக செயல்பட உதவும். செரோடனின் உள்ளிட்டவை சீராக இயங்கும். இது Mood ஸ்விங்ஸ் உள்ளிட்டவற்றை நிர்வகிக்க உதவும். இது மனசோர்வை குறைக்க உதவும்.
உடலில் gamma-aminobutyric என்ற ஆசிட் செயல்பாட்டை மெக்னீசியம் சீராக இருக்க உதவும். இது மூளை செல்களை ஆசுவாசப்படுத்தும். இது மன, மூளை செயல்பாடுகளை ரிலாக்ஸாக இருக்க உதவும்.
ஸ்ட்ரெஸ் ரெஸ்பான்ஸ்:
ஹைப்போதெலமஸ், பிட்யூட்டரி (hypothalamic-pituitary-adrenal (HPA)) ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு மெக்னீசியம் தேவையாக இருக்கிறது. இது Stress கட்டுப்படுத்த உதவும். போதுமான அளவு உணவில் மெக்னீசியம் இருப்பதை உறுதி செய்வது நல்லது.
அமைதியான தூக்கம்:
மெக்னீசியம் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். இது தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் ஹார்மோனை சீராக இயங்க வைக்கும். இது சீரான தூக்கத்திற்கு உதவும். ஒரு நாளைக்கு போதுமான அளவு தூங்கினாலே மனசோர்வு, மன அழுத்தம் உள்ளிட்டவற்றை நன்றாக நிர்வகிக்க முடியும்.
தூக்கம் - 10-3-2-1-0 ஃபார்முலா:
ஃபிட்னஸ் கோச் Martolia, நிம்மத்தியான தூக்கத்திற்கு சொல்லும் டிப்ஸ்கள் இவை:
தூங்க செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உணவுகளுக்கு நோ சொல்வது, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிடுவது, தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அலுவல் சார்ந்த பணிகளை 2 மணி நேரத்திற்கு முன்னதாவே முடித்து கொள்வது, படுக்கைச் செல்வதற்கு 1 மணி நேரம் முன்னதாகவே எல்க்ட்ரானிஸ் கேட்ஜட்களைத் தவிர்ப்பது, உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம். இதை பழக்கமாகவும் மாற்றிகொள்ளலாம். அதோடு, மன சோர்வு அதிகரிக்காமல் இருக்க தினமும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஒழுங்கான வாழ்க்கை முறை இல்லாதது, சரியான உடல் இயக்கம் இல்லாதது ஆகியவற்றினால் தூக்கம் பாதிக்கப்படும். இரவு நேரத்தில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் பார்ப்பது உள்ளிட்ட எல்க்ட்ரானிக் கேஜட்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் தூக்கம் வருவதில் சிக்கல்கள் இருக்கும்.
இரவு அதிகமாகச் சாப்பிட்டாலோ, அதிகமாக காரம், எண்ணெய் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டாலோ தூக்கம் பாதிக்கப்படும். ஏனெனில், உணவு செரிக்க அதிக நேரம் எடுக்கும். செரிமானக்கோளாறுகள் ஏற்படும். மன சோர்வு இருக்கும் சமயத்தில் துரித உணவுகளை சாப்பிட கூடாது. அதிக இனிப்பு சாப்பிடுவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
மனதில் எதையாவது நினைத்து கவலைப்படுவது, மனஅழுத்தம், மன உளைச்சலுக்கு வழிவகுகும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும். இவையெல்லாம் 'ஸ்லீப் ஆன்செட் இன்சோம்னியா' ஏற்பட முக்கியக் காரணங்கள்.
சீரான உடற்பயிற்சி,சூரிய ஒளி உடலில் படுவது,தூங்குவதற்கு முன்பு டி.வி., மொபைல் பார்ப்பது உள்ளிட்டவற்றை தவிர்ப்பது, இரவு தூங்கச் செல்வதற்கு 3 மணிநேரம் முன்பாகவே சாப்பிடுவது என இப்படியான நடைமுறைகளை பின்பற்றுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)