LGBT: தன்பால் ஈர்ப்பு: ‛இவ தான் என் காதலி...’ பகிரங்கமாக அறிவித்த மதுரை பெண் இயக்குனர்!
LGBT : தன்பால் ஈர்ப்பாளர்கள் சிலர் தங்கள் உறவுகளை வெளியில் சொல்ல தயங்கும் சூழலில், திவ்யபாரதி, துணிந்து தன்னுடைய உறவை அறிவித்ததுடன், போட்டோக்களையும் வெளியிட்டு புரட்சி செய்துள்ளார்.
![LGBT: தன்பால் ஈர்ப்பு: ‛இவ தான் என் காதலி...’ பகிரங்கமாக அறிவித்த மதுரை பெண் இயக்குனர்! LGBT Madurai activists Divya Bharathi introduced his girlfriend LGBT: தன்பால் ஈர்ப்பு: ‛இவ தான் என் காதலி...’ பகிரங்கமாக அறிவித்த மதுரை பெண் இயக்குனர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/09/3999cfb5271742da0a0239b40cd37c8b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கக்கூஸ் ஆவணப்படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் திவ்யபாரதி. வழக்கறிஞர், சமூக செயற்பட்டாளர் என பல்வேறு முகங்களை கொண்டவர். கைது, சிறை, களமாடல் என தொடர்ந்து சமூகத்தில் பல்வேறு விசயங்களுக்கு குரல் கொடுத்து வரும் திவ்யபாரதி, அடிக்கடி புரட்சிகரமான கருத்துக்களை முகநூலில் பதிவிடுபவர்.
சமீபமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று கூறப்படும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தார். அப்போது, ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, தானும் தன்பால் ஈர்ப்பாளர் தான் என பகிரங்கமாக அறிவித்தார் திவ்யபாரதி. யாருடன் அவர் ஈர்ப்பில் உள்ளார் என்கிற கேள்விகள் எல்லாம் அப்போது எழுப்பப்பட்டது. இது நடந்து சில மாதங்கள் இருக்கும்.
இந்நிலையில், தன்னுடைய முகநூலில் , தன்னுடைய நீண்ட நாள் தோழி, தனக்கு காதலியாக கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளார். ஷாலு என்கிற தோழியுடன் உறவில் இருப்பதாக திவ்யபாரதி அறிவித்திருப்பதற்கு அவரை பின் தொடரும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முகநூலில் தன்னை பின் தொடர்வோரின் வாழ்த்து மழையில் நணைந்து வரும் திவ்யபாரதி, முதன் முதலில் ஷாலு உடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் ,
‛‛2019ல் உன்னோடு எதேச்சையாக அமைந்த இந்த புகைப்படங்களே இன்று நம் வாழ்வாகி போனதில் பெரும் நிம்மதி எனக்கு...’’ என , அந்த பதிவில் தெரிவித்துள்ள திவ்யபாரதி, ஷாலு உடன் உள்ள போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.
தன்பால் ஈர்ப்பாளர்கள் சிலர் தங்கள் உறவுகளை வெளியில் சொல்ல தயங்கும் சூழலில், திவ்யபாரதி, துணிந்து தன்னுடைய உறவை அறிவித்ததுடன், போட்டோக்களையும் வெளியிட்டு புரட்சி செய்துள்ளார். 2009ல் தொடங்கிய இவர்களது நட்பு, தற்போது காதலாக மாறியிருக்கிறது.
சமீபகாலமாக, பெண்ணும் பெண்ணும் காதலித்தால் என்ன தவறு என்று இணையதளங்களில் பேட்டியளித்து வந்த திவ்யபாரதி, இனி அது தொடர்பான கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் முயற்சியில் இறங்குவார் என்று தெரிகிறது.
பொதுவாக திவ்யபாரதி வெளியிடும் புரட்சிகரமான கருத்துக்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிடுவதுண்டு. அது மாதிரி, இந்த கருத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம். ஆனால், திவ்யபாரதி எப்போதும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)