மேலும் அறிய

’கன்னி நாய் கன்னிப் பெண்ணுக்கு சீதனமாக தரப்பட்டதா?’ உண்மையில் நடைமுறையில் இருந்த வழக்கம் என்ன..?

குலவர் சமூகத்தில் பெண் பார்க்க வரும் மணமகன் தனது மாமனாருக்கு பரிசுப் பணமாக மூன்று பன்றிகளையும் அரை ரூபாயையும் கொடுக்க வேண்டும்.

                                               வேட்டைத்துணைவன் 14

கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் பகுதி -  06

வருகை, பகிர்வு, பரவல் – என வரலாற்று நோக்கிலும், கவுரவம், இனவழி என இந்நாய்கள் மீது ஏற்றப்பட மதிப்பு  நோக்கிலும் ஒரு புரிதலை ஏற்படுத்தவே கடந்த சில தொடர்களை நாம் ஒதுக்கி இருந்தோம். மரபில் நம் நாய்கள் பெற்று இருந்த கடை நிலை இடம் அல்ல இப்போது இவை அடைந்திருப்பது. ஆனால் இன்றைய தேதியில் அதே மரபு என்ற சொல்லாலே அவை மதிப்பு கூட்டிக் காட்டப் படுகிறது. அந்த மதிப்பு எப்படி சாத்தியமானது என்பதை அறியாமல் நாய்களை எப்படி அணுக முடியும். அதனாலேயே இந்த இனத்தை சுற்றிய அத்தனையையும் முதலில் சொல்லித் தொடங்குகிறேன்.

“கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் “ கவனித்தீர்கள் என்றால் நான் இதுவரை ரெண்டு பெயரையும் சேர்த்தே தான் குறிப்பிட்டு வருகிறேன் என்பது புரியும்.  அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை. பெயர் இங்கு எப்போதுமே சிக்கல் தான் அல்லவா. பொருள் ஒன்று பெயர்கள் பல ! இங்கும் அதுதான். அது ஒரு சிக்கலை ஏற்படுத்தத்தான் செய்கிறது.  அதிலும் புதிதாக வருபவர்களுக்கு அடைப்படைத் தடுமாற்றம் இங்கு இருந்துதான் துவங்கும் என்பதை நாம் உறுதியாகவே சொல்ல முடியும்.

’கன்னி நாய் கன்னிப் பெண்ணுக்கு சீதனமாக தரப்பட்டதா?’ உண்மையில் நடைமுறையில் இருந்த வழக்கம் என்ன..?

இன்றைய சூழ்நிலையில் இவற்றுக்கு பொதுவான பெயர் சிப்பிப்பாறை நாய்கள் என்று எடுத்துக்கொண்டால் கன்னி நாய் என்பது சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் கருப்பு நாய்கள் தான் என்றாகிவிடும்.  சரி ரெண்டுக்கும் என்ன வேறுபாடு என்றால் கருப்பு வந்தால் கன்னி அது தவிர பிற நிறத்தில் வந்தால் அது சிப்பிப்பாறை அவ்வளவுதான் .இப்படித் தான் இருக்கிறது இன்றைய மனோநிலை – தெளிவு எல்லாமும்.

இவற்றுள், கருப்பு நிறம் கன்னி,  பிற நிறங்கள் சிப்பிப்பாறை  என்ற அடிப்படையில் இவை ரெண்டுமே வேறு வேறு இனங்கள் எனக்கருதும் சாராரும் இங்கு உண்டு. உண்மையில் அது கருத்து கூட அல்ல ! கலப்படம் இல்லாத நயமான போதாமை. நிறங்கள் தான் வேறு வேறே அன்றி இனம் எல்லாம் ஒன்று தான். அவற்றுள் வரும் எல்லா நிறங்களிலும் இந்நாய்கள் குட்டிகளை ஈனும் என்ற அடிப்படை உண்மையைக்கூட அறியாமல் எவரோ சொல்லக் கேட்டு யாரோ சிலர் எழுதி வைத்தது வந்த குழப்பங்கள் இவை ! எழுதியவர்கள் எவராவது இந்நாய்களை வளர்த்தவர்களா? அல்லது இந்நாய்களில் நிலவும் குறிச்சொல் அறிந்தவர்களா? ரகங்கள் உணர்த்தவர்களா என்றால் சர்வ நிச்சியமாகக் கிடையாது.

ஆனாலும் தான் சொன்னது சரி என்று வாதிடுவதற்கு கதைகளை கட்டிவிட்டிருக்கிறார்கள்.அதில் மிக புகழ் பெற்ற கட்டுக்கதை கன்னி நாய் கன்னிப் பெண்ணுக்கு சீதனமாக தரப்பட்டது என்பது.  சரி அப்படியே வைத்துக்கொள்ளவோம் ஒரு ஒரு சின்ன சடங்கும் சமூகத்திற்கு சமூகம் மாறுபடும் இது உண்மையானால் எந்தச் சமூகம் கன்னி நாய்களை சீதனம் தந்தது. இல்லை இல்லை இது ஒட்டு மொத்த தமிழர்களின் வழக்கம் என்று வைத்துக்கொண்டால் தெருவெங்கும் கன்னி நாயாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா, நிச்சயம் என் பாட்டி கன்னி நாயை சீதனமாக கொண்டு வரவில்லை என்பது எனக்குத் தெரியும். படிப்பவர்கள் பாட்டியும் கொண்டு வரவில்லைதான். வழக்கு அழிந்தது என்று அளந்து விட்டால் கூட ஒரு அர்த்தம் பொருத்தம் வேண்டுமே !தோராயமாக இவை தமிழகம் வந்து நான்கு நூற்றாண்டுகள் இருக்கலாம். அதற்குள் இந்த வழக்கம் வந்து சுவிட்ச் போட்டது போல அமர்ந்து விட்டதா? எதையாவது நிறுவ வேண்டும் என்றால் போதும் கூடவே மரபை முடித்து போட்டுவிட்ட வேண்டும் நம்மபவர்களுக்கு !  இப்படி சடங்கு எங்காவது, எந்த சமூகத்திலாவது நாய் கொடுத்தது போல சுவடுகள் உண்டா?  என்றால் உண்டு’கன்னி நாய் கன்னிப் பெண்ணுக்கு சீதனமாக தரப்பட்டதா?’ உண்மையில் நடைமுறையில் இருந்த வழக்கம் என்ன..?

1898, ஆம் ஆண்டு வெளியான T.B.pandiyan உடைய “Indian village folk” என்ற புத்தகத்தில் குலவர் ( kulavars- புத்தகத்தில்) சமூகத்தில் பெண் பார்க்க வரும் மணமகன் தனது மாமனாருக்கு பரிசுப் பணமாக மூன்று பன்றிகளையும் அரை ரூபாயையும் கொடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாத போது மூன்று கோழியையும் ஒரு நாயையும் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை பார்க்க முடிகிறது. பன்றிகள் வளர்ப்பதை தொழிலாகக் கொண்டவர்களுக்கு அந்த நாய்கள் இன்றியமையாதது. அவை கன்னி நாய்கள் அல்ல..இருந்தால் poligar என்றே சொல்லி இருப்பார். மேலும் கன்னி நாய்கள் முயல் வேட்டைக்கு தான் ஆகும். அன்றைய சூழ்நிலையில் அவை நல்ல பருவட்டு நாட்டு நாய்களாக இருந்திருக்கும்.

இப்படி ஒரு சிறு நிகழ்வு ஒரு எளிய மக்கள் பிரிவில் உள்ளதை திரித்து கன்னி நாய்க்கும் கன்னி பெண்ணுக்கும் முடித்து போட்டு விட்டனர் அறிஞர் பெருமக்கள். மேற்கண்ட புத்தகக் குறிப்பைக் கூட யோசித்தே சொல்ல வேண்டியது இருக்கிறது. காரணம் நாளைக்கே இதை வைத்துக்கொண்டு youtube முழுக்க பாரம்பரியமாக கொடுத்த பருவட்டு நாட்டு நாய்கள் அழிந்து போன அடையாளம் மீட்டு எடுக்க ஒரு புதிய முயற்சி என்ற தலைபில் நான்கு நாயோடு ஒருவர் பேட்டி தருவாரோ என்ற பயம் தான்.

சரி அது ஒரு புறம் போகட்டும். கன்னிக்கு என்ன தான் பதில் என்று கேட்கிறீர்களா?  இங்கு பலரும் ஒன்றை சிந்திக்க விட்டுவிட்டோம்.கன்னி நாய்கள் இருக்கும் இதே தென்மாவட்டங்களில் தான் கன்னி ஆடு இனமும் இருக்கிறது. அதுவும் கருப்பு தான் சொல்லப் போனால் முழு கருப்பு அல்ல ! கன்னி நாய்கள் போலவே பொட்டு – தாடை எல்லாமும் வெள்ளை உண்டு. பால் கன்னி ஆடு என்று தான் அதற்கும் பெயர்.

பெரும்பாலும் மாட்டுக்கும், ஆட்டுக்கும், நாயிக்கும் நிறப் பெயர் ஒன்று பட்டு தான் இருக்கும். காரணம் முன்பு நாம் பார்த்தது போல இந்நாய்களை துடக்கத்தில் வைத்திருந்தவர்கள் எல்லாரும் ஒரு வகையில் மேச்சல் வேளாண்மை செய்தவர்கள். பின் அதை தொட்டு தானே பெயர்கள் வரும்! அதுபோலவே அழைப்பது கூட நிற அடிப்படையில் தான். சாம்பப் புள்ள, சந்தனப் புள்ள, செவலப் புள்ள இவை மாட்டுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க !

நிற்க இவற்றுக்கு நிற பெயர்கள் இவ்வளவு இருந்தால் பொதுவான பெயர் ஒன்று இருந்திருக்கவில்லையா என்றால். ஜாதி நாய், வேட்டை நாய் இதுதான் அந்த பெயர். குறிப்பிட்டு இதுதான் புழங்கி வந்த இனப்பெயர்கள். சரி இதில் சிப்பிப்பாறை எங்கு இருந்து வந்தது என்ற கேள்வி நமக்கு வருகிறது அல்லவா? உண்மையில் இந்த நாய்க்கும் அதற்கும் தொடர்பு உண்டா? அல்லது இல்லையா? ஏன் இவை வேறு கன்னி வேறு என்று சொல்லத் துடங்கினார்கள்? சிப்பிப்பாறை நாய்கள் என்பவை?  இன்று நம்மிடம் உள்ளவை தானா? போன்ற வேள்விகளுக்கான நீண்ட விடைகளுக்கு காத்திருங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget