மேலும் அறிய

Watermelon : வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

தர்பூசணியின் ஒரு கீற்றில் ஒரு நாளுக்கு உடலுக்குத் தேவையான 16 சதவிகித வைட்டமின் சி கிடைத்து விடுகிறது. வைட்டமின் சி எதிர்ப்புத் திறனை உறுதிபடுத்தத் தேவையான அடிப்படை சத்து என்பது அனைவருக்கும் தெரியும், வெயில் காலங்களில் அதிகரிக்கும் தொற்றுகளில் இருந்து உடலைக் காக்க இது நமக்குத் தேவை ஆகிறது. ஆனால், வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காணலாம்.

Watermelon : வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?

ஒரு நாளை தொடங்கும்போது காலை உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பது என்பது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவும். மேலும், இது அந்த நாளுக்கான ஆற்றலை வழங்கும்.  தர்பூசணி ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளில் ஒன்றாகத் இருக்கிறது. 95% நீர்ச்சத்து  மற்றும் வைட்டமின்கள்,  தாதுக்கள் நிறைந்த பழம். அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட தர்பூசணியை பலர் காலை உணவோடு சாப்பிடலாம். வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? 

ஊட்டச்சத்து நிபுணர் அனுபமா மேனன், தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பதிலை காணலாம் “வெற்று வயிற்றில் பழங்களை சாப்பிடுவது ஒருவரின் தனிப்பட்ட உடல் மற்றும் ஹார்மோன் செயல்பாட்டின் அடிப்படையில் பயனளிக்கலாம் அல்லது பயனளிக்காமல் போகலாம். leptin secretion அல்லது இன்சுலின் எதிர்திறன் இருந்தால், காலை உணவில் பழங்கள் சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்காது.

வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடக்கூடாது. பழத்தை மற்ற நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் ஸ்நாக்ஸ் போல உட்கொள்ளலாம். அப்படி செய்தால், குறிப்பிட்ட காலத்திற்கு, உடலில் அதிகப்படியான லெப்டின் சுரப்பதால் (உற்பத்தி செய்யப்படுகிறது) கொழுப்பு திசுக்களால்), உணர்திறன் குறைந்து, பிரக்டோஸ் சகிப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது, அதனால் உடலில் அதிக கொழுப்பு உற்பத்தி மற்றும் சேமிப்பை ஏற்படுத்துகிறது" என்று விளக்கமளித்துள்ளார்.

Watermelon : வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது cortisol அளவை உயர்த்தும்

காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணியை முதலில் சாப்பிடுவது, ஃபிரக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இது உடலில் உள்ள கார்டிசோலின் அளவை உயர்த்தக்கூடும், இது இன்சுலின் ரெசிஸ்டென்ஸை எற்படுத்தும்.

யார் தர்பூசணி சாப்பிடலாம்?

மேலும் பேசிய அனுபமா “பழங்களை எந்த சிரமும் இன்றி ஏற்றுக்கொள்ளும் உடல் கொண்ட ஒரு நபர், காலை வேளையில் சிறந்த ஊட்டச்சத்து தேவைக்காக பழங்களை சாப்பிடலாம். முழு பழமாக உட்கொள்ளும் போது பழத்தில் நார்ச்சத்து இருப்பதால், அதிலிருந்து குளுக்கோஸ் மெதுவாக வெளியேற உதவுகிறது. பழங்களைத் தேர்ந்தெடுப்பது போலவே, பழங்களைச் சாப்பிடுவதற்கான சரியான நேரம் முக்கியமானது," என்று தெரிவித்தார்.

நோய் எதிர்ப்புத்திறனுக்கான ஜூஸ்

துளசி, கற்றாழை, தர்பூசணி கொண்டு நோய் எதிர்ப்புச்சக்தியினை அதிகரிக்கும் பானத்தினை எளிதாக செய்யலாம். மேலும் தர்பூசணியில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அதேபோன்று கற்றாழை மற்றும் துளசியில் நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதால் இந்த 3 பொருட்களும் சேர்ந்து நம்முடைய நோய் எதிர்ப்புச்சக்தியினை அதிகப்படுத்தும். எனவே இந்நேரத்தில் இதனை தயாரிக்கும் முறை மற்றும் தேவையான பொருட்கள் என்ன எனத் தெரிந்துகொள்வோம்.

Watermelon : வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?

தேவையான பொருட்கள்:

பெரிதாக நறுக்கிய 5-6 தர்பூசணி.

5- 6 துளசி இழைகள்

2 - 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல்

1 டீஸ்பூன் கருப்பு உப்பு

1/2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள்

1/4 கப் தண்ணீர்

எலுமிச்சை சாறு 1-2 தேக்கரண்டி

செய்முறை:

நறுக்கிய தர்பூசணி, துளசி இலைகள், கற்றாழை ஜெல், கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் கருப்பு மிளகு தூள் அனைத்தையும் நன்கு கலக்க வேண்டும். இதனையடுத்து சுவைக்கு ஏற்றவாறு உப்பு மற்றும் மிளகு சேர்த்துக்கொள்ளவும். பிறகு இந்த சாற்றை வடிகட்டியில் வடிகட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் குளிர்ச்சியாக பருக வேண்டும் என்று நினைப்பவர்கள் இதில் ஐஸ் கலந்து சாப்பிடலாம். தேவைப்படாதோர் அப்படியே பருகிக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget