International Day of Charity 2022 : சர்வதேச தொண்டு தினம் இன்று ! வரலாறும் ! முக்கியத்துவமும்!
அன்னை தெரசாவின் தியாகத்தையும் , சமூக தொண்டையும் நினைவு கூறும் வகையில் அவர் மறைந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை சர்வதேச தொண்டு தினமாக அறிவித்தது ஐ.நா சபை .
நோக்கம் :
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச தொண்டுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடு சபை அறிவித்ததன் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் இந்த சர்வதேச தொண்டு தினத்தின் முக்கிய நோக்கம் மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் இணைந்து உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான்.அப்படிச் செய்வதன் மூலம் சமூகப் பிணைப்பை உருவாக்கி உலகம் முழுவதும் தொண்டுக்கான பொதுவான தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடியும் என நம்புகின்றனர்.
வரலாறு :
சமூக தொண்டில் அனைவருக்குமான முன்னோடியாக இருப்பவர் அன்னை தெரசா. அன்னை தெரசாவின் தியாகத்தையும் , சமூக தொண்டையும் நினைவு கூறும் வகையில் அவர் மறைந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை சர்வதேச தொண்டு தினமாக அறிவித்தது ஐ.நா சபை . அன்னை தெரசா 1979 இல் "வறுமை மற்றும் துயரத்தை சமாளிப்பதற்கான போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிக்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். அன்னை தெரசா 1910 இல் கிரீஸின் மாசிடோனியாவில் பிறந்தார், 1928 இல், அவர் இந்தியாவிற்கு வந்து சமூக அர்ப்பணிப்பை செய்தார். 1950 இல் கொல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியை நிறுவினார்.
சர்வதேச தொண்டு நாள் 2022: தீம்
உலக அளவில் தீவிர வறுமையை ஒழிப்பது மிகப்பெரிய உலகளாவிய பிரச்சனைகளுள் ஒன்றாக இருக்கிறது. 2015 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘2030 ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலில்’, ஐக்கிய நாடுகள் சபையானது, இதற்கான நோக்கத்தை குறிக்கோளாக கொண்டது. ஆதரவற்றவர்களின் தேவைகளில் கவனம் செலுத்தும் உலகளாவிய ஒற்றுமைக்கு நிகழ்ச்சி நிரல் அழைப்பு விடுக்கிறது. நிகழ்ச்சி நிரலில் அமைக்கப்பட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளை மக்கள், கிரகம், செழிப்பு, அமைதி மற்றும் கூட்டாண்மை ஆகிய ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்.
முக்கியத்துவம் :
மனிதாபிமான அடிப்படையில் செய்யும் தொண்டு மக்களின் சிக்கலை குறைக்க உதவுகிறது. கல்வி, வீட்டுவசதி மற்றும் குழந்தை பாதுகாப்புக்கு உதவ வேண்டும் என்பதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.இது கலாச்சார முன்னேற்றங்களை ஊக்குவிக்கிறது மற்றும் கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியம், அறிவியல் மற்றும் விளையாட்டுகளை பாதுகாக்கிறது.தொண்டு நிறுவனங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கியவர்களின் உரிமைகளை மேம்படுத்த உதவுகின்றன . இந்த நாள் சமூகத்தின் சக்தியை உணர்த்தவும் மற்றும் இளம் தலைமுறையினருக்கு தாராள மனப்பான்மையை ஏற்படுத்தவும் தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதுமே இந்த நாளின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.