ஆரோக்கியத்தில் கில்லி.. அத்திப்பழ அல்வா.. இப்படி ட்ரை பண்ணுங்க!
அத்தி பழம் இயற்கையிலே மிகவும் இனிப்பான ஒரு பழம்.அனைத்து வயதினரும் சாப்பிடலாம். குறிப்பாக பெண்கள், மாதவிடாய் சுழற்சி நேரங்களில் இதை எடுத்து கொள்வது, இரத்த சோகை பிரச்சனை வராமல் தடுக்கும்.
அத்திப் பழம் இயற்கையிலே மிகவும் இனிப்பான ஒரு பழம்.அனைத்து வயதினரும் சாப்பிடலாம். குறிப்பாக பெண்கள், மாதவிடாய் சுழற்சி நேரங்களில் இதை எடுத்து கொள்வது, இரத்த சோகை பிரச்சனை வராமல் தடுக்கும். ஊட்டச்சத்து மிக்க இந்த அத்தி பழ அல்வா எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
அத்தி பழ அல்வா செய்ய தேவையான பொருள்கள்.
அத்தி பழம் - 250 கிராம் ( ஊறவைத்தது )
கோயா - 200 கிராம்
ஏலக்காய் - தேவையான அளவு
லவங்க பட்டை - 1
சர்க்கரை - தேவையான அளவு
நெய் - 4 டீஸ்பூன்
முந்திரி, ,பாதாம், பிஸ்தா - சிறிதாக நறுக்கியது
செய்முறை
- அத்தி பழத்தை நாற்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 4 டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து அதில் ஏலக்காய், பட்டை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளவும்.
- பின்னர் அதில் ஊறவைத்த அத்தி பழத்தை மட்டும் தனியாக எடுத்து பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வதக்கவும். ஒரு 3-5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
- பின் அதில் ஊறவைத்த அத்தி பழ தண்ணீரை சேர்த்து 10 நிமிடங்கள் மெதுவாக கிளறவும்.
- பின் அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, அத்தி பழத்துடன் நன்றாக கிளறவும்.
- அல்வா பதம் வரும் வரை கிளறவும்.
- அதனுடன் உலர் பழங்களை சேர்த்து கிளறி மேலே கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கவும்.
- சுவையான, ஊட்டச்சத்து மிக்க அத்தி பழ அல்வா தயார்.
இந்த அல்வா காற்று புகாத பாட்டிலில் அடைத்து, பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை சாப்பிடலாம். கெட்டு போகாமல் இருக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்கள், குழந்தைகள், இரத்த சோகை நோய் இருப்பவர்கள், கருவுற்ற தாய்மார்கள்,பாலூட்டும் தாய்மார்கள், மற்றும் விந்தணு குறைபாடு இருப்பவர்கள், என அனைத்து வயதினரும் எடுத்து கொள்ளலாம். ஒரு நாளுக்கு 2-4 அத்தி பழம் சாப்பிடுவது நல்லது. இயற்கையிலே அதிக சுவையுடைய பழம். இது பழமாக கிடைத்தால் ஜூஸ் ஆக குடிக்கலாம். அல்லது காய்ந்த அத்தி பழமாக இருந்தால், நீரில் ஊறவைத்து சாப்பிடலாம். இது இரும்பு சத்து, நார்சத்து, வைட்டமின், தாதுக்கள் நிறைந்த ஒரு பழம்.
யாரெல்லாம் சாப்பிட கூடாது? சர்க்கரை நோயாளிகள். இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாத நோயாளிகள் இதை தவிர்க்கவும். மருத்துவ ஆலோசனைக்கு பிறகு எடுத்து கொள்ளலாம்.