மேலும் அறிய

பருப்பு சீக்கிரம் வேகனுமா? பூரி மொறு, மொறுனு வரனுமா? இனிமே இதை மட்டும் பண்ணுங்க

வீட்டில் சமைக்கும்போது சமையல் எளிதாகவும், சுவையாகவும், வாசனையாகவும் அமைய என்ன செய்ய வேண்டும்? என்பதை கீழே காணலாம்.

உணவுப்பொருட்களைச் சமைக்கும்போது சில விஷயங்களை நாம் பின்பற்றினால் அதன் சுவையும், தரமும் மேலும் அதிகரிக்கும். அவை என்னென்ன என்பதை கீழே காணலாம்.

1. கீரைகள் மற்றும் கிழங்குகள் ஆகியவற்றை சமைக்கும்போது அதை மூடிவைத்து சமைக்கக்கூடாது. 

2. கீரைகளை வேகவைக்கும்போது இரண்டு பல் பூண்டும், ஒரு தக்காளியும் சேர்த்து வைப்பது சிறப்பாகும்.

3. பலருக்கும் பூரி சுடும்போது அது மொறு, மொறுவென்று வரவில்லை என்ற வேதனை இருக்கும். அதற்கு பூரிக்கு மாவு பிசையும்போது அதனுடன் சற்று ரவை சேர்த்து பிசைந்தால் பூரி மொறு, மொறுவென்று வரும்.

4. மாம்பழக் குழம்பை கெட்டியாக வைப்பது எப்படி? என்று பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதற்கு தேங்காய், மிளகு, மஞ்சள், சீரகம் ஆகியவற்றை நாம் அரைக்கும்போதே அதனுடன் பச்சரிசியும் சற்று சேர்த்து அரைத்தால் மாம்பழக்குழம்பு கெட்டியாக வரும். 

5. பொதுவாக காய்கறிகள், பழங்களை வாங்கி வந்தால் அவற்றை காற்றோட்டமாக வைப்பதே சிறந்ததாகவும். வெங்காயம் வாங்கி வந்தவுடன் அவற்றை வெளியில் தரையில் கொட்டி வைப்பது சிறப்பாகும். பிளாஸ்டிக் கவர், ப்ரிட்ஜ் ஆகியவற்றில் வைப்பதை தவிர்ப்பது சிறப்பாகும். 

6. மாங்காய் ஊறுகாய் நன்றாக வாசனை வருவதற்கு மாங்காயை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கியதுடன் அதனுடன் உப்பு, மிளகு, பொடி சேர்த்த பிறகு சிறியளவு தேங்காய்ப்பால், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் மாங்காய் ஊறுகாய் ஊறிவிடுவது மட்டுமின்றி, சாப்பிட சுவையாகவும் இருக்கும்.

7. சமைப்பதற்காக தேங்காய் பலரும் உடைக்கும்போது இரண்டாக உடையாமல் சிதறலாக உடைவதால் சிரமம் அடைவார்கள். அதற்கு தேங்காயை உடைப்பதற்கு ஒரு 5 நிமிடத்திற்கு முன்பு நன்றாக குளிர்ந்த நீரில் மூழ்க வைக்க வேண்டும். அதன்பின்பு, எடுத்து உடைத்தால் தேங்காய் நன்றாக சரிபாதியாக உடையும். 

8. ரசத்தில் பல வகை உண்டு. எந்த வகை ரசமாக இருந்தாலும் அதை ஒரு ஸ்பூன் நெய்யில் தாளித்தால் அதன் சுவை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும்.

9.பெரும்பாலும் வீடுகள் பருப்பு வேகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது பெரும் தலைவலியான ஒன்றாக இருக்கும். அதற்கு துவரம் பருப்பை வேக வைக்கும்போது, அதனுடன் பூண்டையோ அல்லது கடலை எண்ணெய் சிறிய அளவோ சேர்த்தால் மிக சீக்கிரம் வெந்து விடும்.

10. இட்லி மாவு புளித்துவிட்டால் என்ன செய்வது? என்ற குழப்பம் சிலருக்கு இருக்கும். அவ்வாறு புளித்துவிட்டால் அதில் கடுகு, உளுந்து, சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து குழிப்பணியாரமாக செய்து சாப்பிடலாம்.


இனி வீட்டில் சமைக்கும்போது இதை அனைவரும் வீடுகளில் பின்பற்றினால் சமையல் எளிதானதாக மாறும்.

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?
மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?
Sugar Cut: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump Vs Iran: ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
Punch EV Real World Milage: பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
“ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
Embed widget