மேலும் அறிய

சூப்பரு... மாடித்தோட்டம் அமைக்க 50 சதவீதம் மானியம்! எப்படி விண்ணப்பிப்பது? தமிழக அரசு அசத்தல்!

தமிழ்நாட்டில் மாடித்தோட்டத்தை ஊக்குவிப்பதற்கு 50 சதவீதம் அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் தோட்டக்கலை இயங்கி வருகிறது. இந்த துறையின் கீழ் சிறு, குறு விவசாயத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மாடித்தோட்டத்திற்கு மானியம்:

பெருநகரங்களிலும், வளர்ந்து வரும் நகரங்களிலும் மக்களின் அன்றாடத் தேவைகளான காய்கறிகள், கீரைகளை அவர்களே தயாரிக்க மாடித்தோட்டத்தை ஊக்குவித்து வருகின்றனர். 

அந்த வகையில், மாடித்தோட்டம் அமைப்பதற்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டத் தளைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத் தோட்டக்கலை வளர்ச்சித் திட்டமான இந்த திட்டத்தில் வீடுகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு அரசு சார்பில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

மாடித்தோட்ட தொகுப்பில் உள்ள இடு பொருட்கள்:

செடி வளர்ப்பு பைகள்

தென்னை நார் கழிவுக் கட்டிகள்

காய்கறி விதைகள்

அசோஸ்பைரில்லம்

பாஸ்போபாக்டீரியா

டிரைக்கோடெர்மா விரிடி

வேப்ப எண்ணெய்

மண்புழு உரம்

வழிமுறை கையேடு

பஞ்சகவ்யம், தசகவ்யம் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று 

ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக இரண்டு தொகுப்புகள் மட்டுமே அரசு சார்பில் வழங்கப்படும். 

இதற்கு மொத்த விலை ரூபாய் 1450 ஆகும். இதில் அரசு சார்பில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதாவது, ரூபாய் 725 மானியமாக வழங்கப்படுகிறது. பயனாளியின் பங்குத்தொகை ரூபாய் 725 ஆகும். 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்காக மாநிலத் தோட்டக்கலையின் https://tnhorticulture.tn.gov.in இணையதளத்திற்குச் சென்று மாடித்தோட்டம் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில், ஆதார் எண், பெயர், தந்தை பெயர், பாலினம், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாநிலத் தோட்டக்கலை வளர்ச்சித்துறையினரை அணுகலாம். அல்லது அருகில் உள்ள வேளாண்துறை அதிகாரிகளையும் அணுகலாம்.

காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றின் விலை மழையின் நிலவரத்தைப் பொறுத்து மாறுபடும். இதனால், பொதுமக்கள் வியாபாரிகள், சந்தைகளை நம்பியில்லாமல் அவர்களுக்கான உணவுப்பொருட்களை அவர்களே தயாரித்துக் கொள்வதற்காக மாடித்தோட்டத்தை அரசு ஊக்கப்படுத்துகிறது. 

மேலும், நகர்ப்புறங்களில் மாடித்தோட்டம் வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலும் மேலும் வலுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்கள் தவிர தோட்டக்கலை சார்பில் நிழல் வலைக்கூடம், காய்கறி விதைத் தொகுப்பு, பழச்செடித் தொகுப்பு, நீரியல் தோட்டம், செங்குத்து தோட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Bisleri Water: ”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
Mens Day 2026 Wishes: அப்பா முதல் கணவர் வரை... ஆண்கள் தினத்தில் அனுப்ப வேண்டிய அற்புதமான வாழ்த்துகள்! இதோ
அப்பா முதல் கணவர் வரை... ஆண்கள் தினத்தில் அனுப்ப வேண்டிய அற்புதமான வாழ்த்துகள்! இதோ
Mens Day 2026: ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
Embed widget