Shallot Onion and Honey : சின்ன வெங்காயத்தைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டீங்கன்னா.. இந்த மேஜிக் நடக்கும்..
தேனுடன் சின்னவெங்காயத்தை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் பல நோய்களுக்குத் தீர்வு காண்பதோடு பருவ கால நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கவும் உதவியாக உள்ளது.
சின்ன வெங்காயத்தைத் தேனில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அஜுரணக்கோளாறு, ரத்த சுத்திகரிப்பு போன்ற பல்வேறு பருவக்கால நோற்றுதொற்றுகள் குணமாவதற்கு உதவியாக உள்ளது.
தென்னிந்திய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது சின்ன வெங்காயம். இதில் சல்ஃபர், ஆன்டி ஆக்ஸினேடுகள் அதிகளவில் உள்ளதால் நம் சமையலில் சுவையோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது. வெறும் வயிற்றில் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் தீர்வதோடு உடல் எடையையும் குறைக்க முடியும் என்று கூறுவார்கள். இந்த வரிசையில் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் தேனுடன் சின்ன வெங்காயத்தை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் பல நோய்களுக்குத் தீர்வு காண்பதோடு பருவகால நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கவும் உதவியாக உள்ளது.
எனவே இந்நேரத்தில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் நமக்கு என்ன பயன்கள்? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துகொள்வோம். அதற்கு முன்னதாக தேன் வெங்காயம் எப்பது செய்வது? என தெரிந்துகொள்வோம்.
தேன் வெங்காயம் செய்யும் முறை:
முதலில் சுத்தமான பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து இரண்டாகக் கீறி பாட்டிலினுள் போட வேண்டும். இதனையடுத்து சின்ன வெங்காயம் முழுவதுமாக மூழ்கும் அளவிற்குத் தேனை ஊற்ற வேண்டும்.
இரண்டு நாள்கள் அப்படியே ஓரமாக, கைபடாமல் எடுத்துவைக்க வேண்டும். இதனையடுத்து இரண்டு நாள்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும். ஏற்கனவே வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்தும் தேனுடன் ஊறியிருக்கும் நிலையில் சாப்பிடுவதற்கு சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். எனவே இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
தேன் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
அஜீரணக் கோளாறைத் தீர்க்க உதவும்: பொதுவாக சின்ன வெங்காயம், தேன் இரண்டிலுமே மிக அதிக அளவிலான ஆன்டி- ஆக்சிடன்டுகள் இருக்கின்றன. எனவே தேன் வெங்காயத்தை நாம் சாப்பிடும் போது நமது உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் அஜீரணக்கோளாறு உண்டாவதைத் தடுக்கிறது.
இதோடு தேன் வெங்காயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, உடலில் இருக்கும் நச்சுகளை நீக்கி, ரத்தத்தில் உள்ள பிற கழிவுகளை வெளியேற்றுவதோடு ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்ற உதவியாக உள்ளது.
தூக்கமின்மைக்குத் தீர்வு: இன்றைக்கு பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றுதான் தூக்கமின்மை. இதற்கு மாறுபட்ட வாழ்க்கை முறை, ஊட்டச்சத்துக்குறைபாடு, கேஜட்ஸ் பயன்பாடு என அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே தூக்கமின்மை பிரச்சினையை சின்ன வெங்காயம் தீர்க்கும் தன்மை கொண்டது.
நோய் எதிர்ப்பு சக்திக்குத் தீர்வு: சின்ன வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை அதிகரிக்கவும், மூச்சுப்பிரச்சனைகள், ஆஸ்துமா, சளித்தொல்லை, நுரையீரல் போன்ற சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குச் சின்ன வெங்காயம் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். எனவே தினமும் தேன் வெங்காயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலத்திலும் திறன் அதிகரிக்கிறது.
இதோடு மட்டுமின்றி அடி வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கவும் தேன் வெங்காயம் உதவியாக உள்ளது. எனவே நம்முடைய உடல் நல ஆரோக்கியத்திற்கு இனிமேல் தேன் வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள் இது உங்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.