Health Tips: கண்களுக்கு கீழே கரு வளையமா...? இதை ஃபாலோ பண்ணுங்க... சரி ஆகிடும்..!
கார்த்திகை வந்துவிட்டால் திருமணங்கள் களை கட்டும். நிச்சயதார்த்தம், திருமணம் என களைகட்டுவதால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ், ரீல்ஸ் எல்லாம் இதுதானா.. இதுதானா.. எதிர்பார்த்த நன்னாளும் என கதறுகிறது.
கார்த்திகை வந்துவிட்டால் திருமணங்கள் களை கட்டும். நிச்சயதார்த்தம், திருமணம் என களைகட்டுவதால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ், ரீல்ஸ் எல்லாம் இதுதானா.. இதுதானா.. எதிர்பார்த்த நன்னாளும் என கதறுகிறது. மணப்பெண் மட்டுமல்லாமல் பேக்கிரவுண்டில் வரும் எல்லோரும் மேக்கப் போட்டுக் கொள்ளும் காலமாகிவிட்டது இது.
கண் கருவளையம்:
ப்ரைடல் மேக்கப் புக் செய்யும் போது மணப்பெண்ணுடன் இத்தனை பேருக்கு என்று பல்க் புக்கிங் தான் செய்கின்றனர். பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.
இந்நிலையில், இந்த வெட்டிங் சீசனில் எப்படி கண்களுக்குக் கீழ் டார்க் சர்கிள்ஸ் களைவது என்பதற்கான சில டிப்ஸ் இதோ... லண்டனைச் சேர்ந்த சருமநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரியங்கார் மிஸ்ரா இது தொடர்பாக சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.
1. உறக்கம் அவசியம் :
தூக்கமின்மை பல நோய்களுக்கு வித்திடும். முதல் அறிகுறி கண்களுக்கு கீழ் கருவளையம், வீக்கம் ஆகியன ஏற்படுவதுதான். ஆகையால் வேறு எந்த உயர் ரக க்ரீமைவிடவும், மாய்ஸ்சரைஸரைவிடவும், ஆரோக்கிய உணவை விடவும் தூக்கமே அருமருந்து. போதுமான அளவு தூங்கினாலே சருமம் அதில் ஏற்படும் செல் டேமேஜை தானே சரி செய்து கொள்ளும்.
2. ஊட்டச்சத்தான உணவு உண்ணுங்கள்:
உங்கள் உணவில் வைட்டமின் கே, சி, ஏ மற்றும் இ அடங்கிய உணவு மிகமிக அவசியம். தர்பூசணி, தக்காளி, பெர்ரி வகைகள், கீரை வகைகள், ப்ரோக்கோலி, கிட்னி பீன்ஸ், வெள்ளரி ஆகியனவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் உப்பு குறைவான உணவை சாப்பிடுங்கள். இது உடலில் நீர்ச்சத்தை பாதுகாக்கும். இதனால் கண்களுக்கு கீழ் பை விழாது.
3. நீர்ச்சத்தை கவனியுங்கள்:
உங்களுக்கு மதுப்பழக்கம் இருந்தால் அதை விட்டுவிடுங்கள். மது அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து வெகுவாக உறியப்படும். மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள். இதனால் கரு வளையம் குறையும்.
4. மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்:
அண்டர் ஐ ஜெல் சீரம் என்று அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் நிறைய பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றில் தரமானதை வாங்கி பயன்படுத்துங்கள். ஆனால் சீரான தூக்கமும், சத்தான உணவும் இல்லாமல் வெறும் ஜெல் மட்டுமே தடவுவது சிறந்த பலன் தராது.
5. சன்ஸ்க்ரீன் லோஷன்:
சில நேரங்களில் வெயில் காலங்களில் கண்களுக்குக் கீழ் கரு வளையம் ஏற்படலாம். அதனால் வெயில் காலத்தில் எப்போதும் சன் ஸ்க்ரீன் தடவிக் கொண்டு வெளியில் செல்லுங்கள். இல்லாவிட்டால் சன் க்ளாஸ் அணிந்து செல்லலாம்.