மேலும் அறிய

Cucumber Benefits: கொளுத்தும் கோடை வெயில்...! வெள்ளரிக்காயின் வேற லெவல் பயன்கள்...!

Cucumber Benefits in Tamil: எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லை. உடல் சூடு தாங்கவே முடியவில்லை, கண் எரிகிறது என கோடை தொடங்கிவிட்டன.... அதற்கு மட்டுமல்ல வேறு பலவற்றும் சூப்பரான தீர்வாக இருப்பது வெள்ளரிக்காய்

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா...
 
கோடை வெயில் கொளுத்துகிறது. எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லை. உடல் சூடு தாங்கவே முடியவில்லை, கண் எரிகிறது என கோடையின் குமுறுல்கள் தொடங்கிவிட்டன.... அதற்கு மட்டுமல்ல வேறு பலவற்றும் சூப்பரான தீர்வாக இருக்கும் நம்ம லோ பட்ஜெட் டாக்டர் தான் வெள்ளரிக்காய். அதன் பயன்கள் என்னென்னனு பார்க்கலாம் வாங்க...
 
Cucumber Benefits: கொளுத்தும் கோடை வெயில்...! வெள்ளரிக்காயின் வேற லெவல் பயன்கள்...!
 
நாவறட்சி...
 
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.
 
பொட்டாசியச் சத்து...
 
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல்இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.
 
Cucumber Benefits: கொளுத்தும் கோடை வெயில்...! வெள்ளரிக்காயின் வேற லெவல் பயன்கள்...!
 
செரிமானம்...
 
செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.
 
குறைவான கலோரி...
 
காய்கறிகளுள்ளே குறைவான சக்தி / கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான். விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயை பழவகையில் சேர்த்துள்ளனர். ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர். பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்கு தனிச்சுவை உடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது.
 
Cucumber Benefits: கொளுத்தும் கோடை வெயில்...! வெள்ளரிக்காயின் வேற லெவல் பயன்கள்...!
 
சிறுநீரக பிரச்சனைக்கு...
 
சிறுநீர் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
 
அதிக நீர்ச்சத்து...
 
ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம். இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.
 
Cucumber Benefits: கொளுத்தும் கோடை வெயில்...! வெள்ளரிக்காயின் வேற லெவல் பயன்கள்...!
 
வயிற்றுப்புண்...
 
வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும். பேதி நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.
 
தோல் வறட்சிக்கு...
 
வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடைக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.தினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும் போட்டு வைத்து மரக்கறி சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.
 
Cucumber Benefits: கொளுத்தும் கோடை வெயில்...! வெள்ளரிக்காயின் வேற லெவல் பயன்கள்...!
 
உயர் இரத்த அழுத்தம் மற்றும் மலச்சிக்கலுக்கு...
 
இக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
 
Cucumber Benefits: கொளுத்தும் கோடை வெயில்...! வெள்ளரிக்காயின் வேற லெவல் பயன்கள்...!
 
க்ளியரான முகத்திற்கு...
 
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.
 
Cucumber Benefits: கொளுத்தும் கோடை வெயில்...! வெள்ளரிக்காயின் வேற லெவல் பயன்கள்...!
 
நீரிழிவு நோயாளிகளுக்கு...
 
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.
 
Cucumber Benefits: கொளுத்தும் கோடை வெயில்...! வெள்ளரிக்காயின் வேற லெவல் பயன்கள்...!
 
முடி வளர்ச்சிக்கு...
 
முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், கந்தகமும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும். காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில்தான் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.
 
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ் ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமய மலைப்பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.ஜமைகா நாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம் பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். குளிர் சாதனப்பெட்டியில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக் காய்களை பயன்படுத்தலாம். இனி மறக்காம தினமும் உங்கள் உணவில் வெள்ளரிக்காயை சேர்த்துக்கோங்க.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget