Rose Day : ரோஸு ரோஸூ ரோஸூ!! அழகான ரோஸு நீ.. ரோஸ் டேவுடன் நாளை தொடங்கும் காதலர் வாரம்
Rose Day : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 7 அன்று ரோஜா தினம் அனுசரிக்கப்படுகிறது.
Rose Day : வருடத்தின் மிகவும் ரொமாண்ட்டிக்கான காதலர்களுக்கான வேலண்டைன் வாரம் ரோஜா தினத்துடன் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் நாள் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு ஒருவாரம் முன்பிருந்தே காதலர் வாரம் அனுசரிக்கப்படுகிறது. அது ரோஜா தினத்திலிருந்து தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 7 அன்று ரோஜா தினம் அனுசரிக்கப்படுகிறது. பரிசுகள், கடிதங்கள், பாடல்கள் மற்றும் கவிதைகள் என பல வகைகளில் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் காதலர்கள் அந்த ஒவ்வொரு தருணத்திலும் ரோஜாவைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
வசந்த காலத்தின் வருகையால் பிப்ரவரியில் பூக்கள் பூக்கும் என்பதால் ரோஜாவுடன் காதலர் தினம் தொடங்குகிறது எனலாம். மேலும் இந்த நாளில் ரோஜாவை பரிசாக வழங்குவதன் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த மலர் அன்பின் பிணைப்பைக் குறிக்கிறது. எனவே, ரோஜா தினத்தில் மக்கள் தங்கள் காதலருக்கு வெவ்வேறு வண்ணங்களில் ரோஜாக்களை பரிசாக வழங்குகிறார்கள்.
அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ரோஜா நிறம் ஒவ்வொரு வகையான உறவினைக் குறிக்கிறது. அதனால் நண்பர்கள் தொடங்கி காதலர்கள் வரை இப்படியான ரோஜாக்கள்தான் கொடுக்க வேண்டும் என்கிற வரையறையும் காதலர் தினத்தில் உண்டு.
1. அனைத்து ரோஜாக்களிலும் சிவப்பு ரோஜா எல்லோராலும் மிகவும் விரும்பப்படுகிறது. இது அன்பையும் பேரார்வத்தையும் குறிக்கிறது.
2. ஆரஞ்சு ரோஜா யாரோ ஒருவர் மீது அபரிமிதமான பேரார்வம் கொண்டிருந்தால் அவருக்கு நீங்கள் தரலாம். நீங்கள் விரும்பும் ஒருவருக்கு ஆரஞ்சு நிற பூவை தருவதன் மூலம் அவர்கள் மீது நீங்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
3. நீங்கள் ஒப்புக்கொள்ள வெட்கப்பட்டாலும், நீங்கள் அவர்களைக் காதலிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு மறைமுகாகத் தெரியப்படுத்த, நீங்கள் விரும்பும் ஒருவருக்கு ஒரு பீச் நிற ரோஜாவை தரலாம்.
4. மஞ்சள் ரோஜா வாழ்நாள் நட்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் தரப்படுகிறது.
5. லாவெண்டர் ரோஜா அரிதானது மற்றும் அழகானது. நீங்கள் யாரையாவது முதல் பார்வையிலேயே காதலித்ததை அவர்களுக்குத் தெரியப்படுத்த அதை பரிசளிக்கவும்.
6. இளஞ்சிவப்பு ரோஜா பாராட்டு மற்றும் போற்றுதலைக் குறிக்கிறது. நீங்கள் யாரையாவது பாராட்ட விரும்பினால், அவர்களுக்கு இளஞ்சிவப்பு ரோஜாவை பரிசளிப்பதன் மூலம் அதனை அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.
7. வெள்ளை ரோஜா எளிமையைக் குறிக்கிறது மற்றும் பொதுவாக திருமண விழாக்கள் அல்லது இறுதிச் சடங்குகளின் போது இது பரிசளிக்கப்படுகிறது.
நாளை ரோஜா தினம் தொடங்குகிறது.. இன்னும் 7 நாட்களில் காதலர் தினம்! முரட்டு சிங்கிள்கள் மனசுக்கு ஏற்றவர்களைக் கண்டடையவும்... தீராத காதலில் திளைத்திருப்பவர்கள் மேலும் மேலும் தங்கள் காதலில் வலிமையுடன் வளர்ந்திடவும் திகட்டத் திகட்ட வாழ்த்துகள்