Fathers Day 2022 Wishes: தந்தையர் தினத்துக்கு வாழ்த்து, புகைப்படங்கள், கவிதைகள்!
இந்த வருடம் தந்தையர் தினம் ஜூன் 19 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
அன்னையர் தினம், தந்தையர் தினம் மட்டுமே அவர்களை போற்ற வேண்டும், மதிக்க வேண்டும், நினைக்க வேண்டுமென்றில்லை. நமக்கு உயிரும், உருவமும் கொடுத்த பெற்றோரை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.
இந்த வருடம் தந்தையர் தினம் ஜூன் 19 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தந்தையர் தினம் கொண்டாடப்படும் தேதி ஆண்டுதோறும் மாறுபடும். காரணம் ஜூன் 3வது ஞாயிறு என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் தேதி மாறுபடும். பெரும்பாலான நாடுகளில் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமைகளிலேயே தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தன்று நம்மை பெற்றெடுத்த பயாலஜிக்கல் ஃபாதர் மட்டுமல்ல நாம் யாரையெல்லாம் அப்பா ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறோமோ அவர்களையும் அரவணைத்துக் கொண்டாடலாம்.
தந்தையர் தின வரலாறு:
தந்தையர் தினம் பரவலாக ஜூன் 3ஆம் ஞாயிறில் கொண்டாடப்பட்டாலும், ஸ்பெயின், போர்ச்சுகல், உள்ளிட்ட நாடுகளில் மார்ச் 19 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தைவானில் ஆகஸ்ட் 8 ஆம் தேதியும், தாய்லாந்தில் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. தாய்லாந்தில் முன்னாள் அரசர் புமிபோல் அடுலியாதேஜ் பிறந்த நாளை முன்னிட்டு தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
தந்தையர் தினம் உருவானதற்கான புகழ் அனைத்தும் சொனோரா ஸ்மார்ட் டாட் என்ற பெண்ணுக்கே சேரும். அந்தப் பெண் அவரது தந்தைக்காக அந்த நாளை கொண்டாடினார். அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தாய் இறந்த பின்னர் தனி நபராக இருந்து தனது தந்தை 6 பிள்ளைகளை வளர்த்ததற்காக அவர் அந்த நாளை கொண்டாட ஆரம்பித்தார். ஒரு நாள் அன்னையர் தின நாளில் அவர் கேட்ட பிரசங்கம் ஒன்று தான் தந்தையர் தினத்தை அவரைக் கொண்டாட வைத்தது.
தந்தையர் தின வாழ்த்து:
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது, அதனால்தான் அவர் தந்தையைப் படைத்தார்.
ஒரு தந்தையிடம் தான் தூக்கிவிடுவதற்கு கரங்களும், அன்பு செலுத்த இதயமும், அரவணைக்க தோள்கள், நம்பிக்கையூட்ட புன்னகையும், ஆசிர்வதிக்க கைகளும், வீடு திரும்பும் போது வரவேற்கும் உள்ளமும் இருக்கிறது.
ஒரு தந்தையின் நம்பிக்கையே அந்தக் குடும்பத்தின் கலங்கரை விளக்கம்.
ஒரு தந்தை அவரது குடும்பத்தை பாதுகாக்க பலத்தையும், வழிநடத்த மதியையும் இறைவினடம் வேண்டுகிறார்.
ஒரு சிறந்த தந்தை எப்போதும் அவரது குடும்பத்தார் தங்கள் வாழ்வு ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாக உணர வைப்பார்.
ஒரு தந்தையின் அரவணைப்பு ஆயிரம் அர்த்தம் கொண்டது. அது நான் உனக்காக இருக்கிறேன். எப்போதும் இருப்பேன். நான் உன்னை எப்போதும் நேசிக்கிறேன் என எல்லாவற்றையும் சொல்லிவிடும்.
ஒரு தாய்க்கு நிகரான ஆசிரியர் இருக்கமுடியாது. ஒரு தந்தையின் மாண்பைப் போல் பரவக்கூடியது எதுவுமில்லை.
செல்ல மகள் தந்தை மடி தாண்டி வளரலாம்; ஆனால் அவர் அன்பை விஞ்சமுடியாது.
ஒரு தந்தை நங்கூரம் போல் நம்மை நிறுத்தவும் மாட்டார், படகைப் போல் இலக்குக்கு கூட்டிச் செல்லவும் மாட்டார். மாறாக கலங்கரை ஒளி போல் வழிகாட்டுவார்.
தந்தை: ஒரு மகனின் முதல் ஹீரோ; ஒரு மகளின் முதல் நேசக்காரன்.
வாழ்க்கையில் தவறேதும் நடந்தால் தந்தையிருக்கிறார் பார்த்துக் கொள்வார்.
தந்தைகளும் மகள்களும் கண்ணோடு கண் பார்ப்பதில்லை. இதயத்தோடு இதயம் பார்க்கின்றனர்.
தந்தையே இருவரில் நீங்கள் தான் பெஸ்ட். ஆனால் அம்மாவிடம் நீங்கள் அதைச் சொல்லும்போது நான் இல்லையென்றே சொல்வேன்.
அப்பா அந்த எட்டுக்கால் பூச்சிகளை எல்லாம் எனக்காக கொன்றதற்கு நன்றி.
அம்மா நோ சொன்னபோதெல்லாம் நீங்கள் யெஸ் சொன்னதற்காக நன்றி.
சிலருக்கு ஹீரோக்கள் மீது நம்பிக்கையில்லை. அவர்கள் இதுவரை என் அப்பாவை பார்த்ததில்லை.
அப்பாவுக்காக சில கோட்ஸ்:
என் அப்பா எனக்காக கை கொடுக்காத போதெல்லாம் முதுகை அல்லவா கொடுத்தார்: லிண்டா பாய்ண்டெக்ஸ்டர்
நான் என் தந்தையை ஆழமாக நேசிக்கிறேன். அவரைப் போல் என்னை சிறப்பாக நடத்த எந்த ஆணாலும் முடியாது: லேடி காகா
ஐ லவ் யூ த்ரீ தவுசண்ட் அப்பா: டோனி ஸ்டார்க்.. அவஞ்சர்ஸ் எண்ட்கேம்
நான் ஓர் இளவரசி. என் துணைக்கு இளவரசன் இருப்பதால் அல்ல. என் தந்தை ஓர் அரசன் என்பதால்
நான் என்னை மதிக்கக் கற்றுக் கொடுத்தவர்தான் என் தந்தை: டான் பிரெஞ்சு
சிறந்த தந்தை இனிமையானவர், மென்மையானவர். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் சிறந்த தந்தைகள் தான்
உண்மையான மார்ஷ்மாலோஸ்: ரசிச்செல் இ குட்ரிச்
நான் கடினமாக உழைக்கவும், மனம்விட்டு சிரிக்கவும் கற்றுக் கொடுத்த தந்தைக்கு நன்றி
என் தந்தையை நான் எந்த ஆணிலும் பார்க்கமுடியாது. அந்த வெற்றிடத்தை அவரைத் தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது.
வாழ்த்தைக் கூட இப்படி சுவாரஸ்யமாக சொல்லலாமே.