மேலும் அறிய

Global Forgiveness Day : மன காயங்களை போக்கும் மாமருந்து மன்னிப்பு.. உலக மன்னிப்பு தினம் இன்று..

மன்னிப்பை நீங்கள் ஒருபோதும் அறியவில்லை என்றால் கடவுள் தரும் ஆசிர்வாதங்களையும் ஒருபோதும் அறிய மாட்டீர்கள் என்பது ஆங்கிலேய அறிஞர் ஒருவரின் பொன்மொழி.

மன்னிப்பு வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது

மகிழ்ச்சியோடு அமைதியான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்றால் இதற்கு சக மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து ஏற்பதே அடித்தளமாக அமையும். கடந்த கால காயங்களை விட்டுவிடவும், காயங்களை குணப்படுத்தவும் மன்னிப்பு என்பதே மா மருந்தாக இருக்கும்.

 துக்கத்தை, வலியையும் உங்கள் இதயங்களில் சுமந்தால் அது உங்கள் மனதையும், இதயத்தையும் விலகச் செய்துவிடும் என்பது உளவியல் அறிஞர்களின் கூற்று. 

வெறுப்புணர்வை கொண்டிருப்பவர்களை விட மன்னிப்பை நாடுவோர் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

 இந்த வகையில் மன்னிக்கும் மனது என்பது உடலையும், மனதையும் மேம்படுத்தும் ஒரு அறிய கலை என்று கூறவேண்டும். 
இது குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 7ஆம் தேதி இன்று உலக மன்னிப்பு தினம் அனுசரிக்க பட்டு வருகிறது.

 இதை ஒட்டி சமூக நல்லிணக்க பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:-

 மன்னிப்பு என்பது ஒரு மனிதன் சக மனிதனுக்கு கொடுக்கும் மாபெரும் பரிசு என்றே கூற வேண்டும் மன்னிக்கும் திறன் என்பது அனைத்து மனிதர்களுக்குள்ளும் இயல்பாக இருக்கிறது. ஆனால் ஆழ்மனதில் ஊடுருவி நிற்கும் தான் என்னும் அகங்காரம் என்பது அதனை தடுத்து விடுகிறது. சுய உழைப்பு கடும் வலிகளை தாண்டி வந்த மனிதர்கள் மன்னிப்பதையும், மன்னிப்பு கேட்பதையும் எளிதாக எடுத்துக் கொள்வார்கள்.

 இதற்கு உதாரணமாக தலைவர்கள், அறிஞர்கள், மேதைகள் பலரை இந்த உலகம் தந்துள்ளது.  இவர்களை தான் நாம் மாமனிதர்கள் என்கிறோம். ஒரு தவறு செய்தால் மன்னிப்பு கேட்பவன் மனிதன் அதனை ஏற்று அரவணைப்பவன் மாமனிதன்.

தமிழ் மொழியின் பிரதானமான சொல்லாடல்

 மாமனிதன் என்ற சொல்லாடல் தமிழ் மொழியில் மிகவும் பிரபலமானது கடந்த கால வரலாறுகளை எடுத்துக் கொண்டால் மக்களை வேதனையில் ஆழ்த்திய கடும் போர்கள் எல்லாம் மன்னிக்கும் நிலைமையில் மனிதர்கள் இல்லாததால் நடந்துள்ளது.

பல யுத்தங்கள் நிறுத்தப்பட்டது

 மன்னிப்பு கோரியதால் உலகளாவிய பல யுத்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. வீடு தொடங்கி நாடு, நகரம், கிராமம் என்று அனைத்து இடங்களிலும் தவறு செய்தால் உடனடியாக மன்னிப்பு கேட்கும் மனப்பாங்கு இருந்தது.

கிராமங்களில் மன்னிப்புக்கு முக்கியத்துவம்

இது மட்டுமின்றி கிராமங்களில் பஞ்சாயத்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதில் மன்னிப்பு என்ற வார்த்தையே உயிரோட்டமாக இருந்தது. ஆனால் இன்றைய மனித வாழ்க்கை சூழல் மனிதனை இயந்திரமாக மாற்றி வைத்துள்ளது. இதன் காரணமாக மன்னிப்பு என்பதற்கான அர்த்தம் புரியாமல் தான் பெரும்பாலானவர்கள் உள்ளனர். முக்கியமாக பழிக்கு பழி என்ற சொல் எங்கு பார்த்தாலும் பிரதானமாக உள்ளது.

மன்னிப்பு என்ற சொல்லை மனிதகுலம்  மறந்ததே இதற்கு முக்கிய காரணம் இந்த சொல்லை மனித மனங்களில் இருந்து முற்றிலும் அழிப்பது ஈகோ என்னும் இரண்டெழுத்து மன்னிக்கலாம் என்ற உள்மனது சொன்னாலும் பழிவாங்க வேண்டும் என்று வெளிவந்து சொல்கின்றது.

மன்னிப்பு கொடுக்காதவன் சமூகத்தில் எப்படி இருப்பான்?

 இதுதான் சமூகத்தில் தனக்கான தனித்தன்மையை நிலை நிறுத்தும் என்ற நினைப்பை தூண்டுகிறது.  இதன் காரணமாகவே பழிக்கு பழி என்று நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.

 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய குறளின் வரிகள். அதாவது நமக்கு தீமை செய்தவர்கள் நாண வேண்டும் என்றால் நாம் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது இந்த வரிகள் உணர்த்தும் பொருள். 

மன்னிப்பு நமக்கு தீங்கு விளைவிக்காது

 இவ்வகையில் மன்னிப்பு என்பது ஒரு விதத்தில் நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நாம் கொடுக்கும் சிறந்த தண்டனைதான். ஆனால் இந்த தண்டனை என்பது இருதரப்பு மனிதர்களையும் மாமனிதனாக மாற்றும்.

 எனவே இந்நாளில் மன்னிக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள அனைவரும் உறுதி ஏற்பது மிகவும் அவசியம் இவ்வாறு நிர்வாகிகள் கூறினர் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!
Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Embed widget