உலக தேங்காய் தினம் : தேங்காயை எப்படி சாப்பிடணும்? இவ்வளவு சத்துக்கள் தெரியுமா?
World Coconut Day : சிலருக்கு தேங்காய் பிடிக்காது. தேங்காய் சாப்பிட்டால் அஜீரணம் ஆவதாக கூட நினைப்பார்கள். ஆனால் அப்படி இருந்தால், வழுக்கை தேங்காயை சாப்பிடுவதை வழக்கமாக வெச்சுக்கோங்க.
World Coconut Day : இன்று உலக தேங்காய் தினம். உலகம் முழுவதும் தேங்காய் பயன்பாட்டின் நன்மைகளை பறைசாற்றுவதும், தேங்காய் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது.
தேங்காயின் பலன்களை நாம் பெரும்பாலானவர்கள் அறிவதில்லை. தேங்காயின் முக்கிய பயன்கள் இதோ..
1. தேங்காய் உட்கொள்வது இதய நலத்தைப் பேணுவதுடன், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கும் தேவையானதாக இருக்கிறது.
2. தேங்காயின் குறைவான கார்போஹைட்ரேட் அளவும், அதன் அதிகமான நார்ச்சத்து அளவும், இதை மிகச்சிறந்த உணவாக மாற்றுகிறது. மேலும், நீரிழிவு நோயை சரியாக நிர்வகிப்பதுடன், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.
3. தேங்காய் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த உணவாக உள்ளது.
4. உங்களின் சரும நலனைக் கணக்கில் கொள்ளும் இயற்கையான வழிமுறைகளில் தேங்காய் பயன்பாடு முதன்மை வகிக்கிறது. சருமத்துக்கு ஈரப்பதத்தை கொடுப்பதுடன், பொலிவையும் தக்கவைக்கிறது.
5. தேங்காய் ஜீரண மண்டலத்தைச் சிறப்பாக்கி, நார்ச்சத்து ஊட்டத்துடன் குடல் நலத்தைப் பாதுகாக்கிறது.
6. தேங்காய் தண்ணீர் நீரேற்றத்துக்கு சிறந்ததாக இருப்பதுடன், தேவையான தாத்துக்களுடன் உடல் இயக்கத்தைச் சீராக வைக்கிறது.
7. பொட்டாசியம் நிறைந்ததாக இருப்பதுடன், ஒட்டுமொத்த உடல் இயக்கத்தையும் சீராக வைக்கிறது.