corona vada: வேகவைத்த கொரோனா வடை! இணையத்தில் வைரலாகும் புது ரெசிபி
ஆமை வடை, உளுந்து வடை, பருப்பு வடை, கீரை வடை இப்படி நிறைய வகை வடைகள் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கொரோனா வடை என்ற புதிய வடை ரெசிபியை அறிமுகம் செய்துள்ளார் இளம் பெண் ஒருவர்.
ஆமை வடை, உளுந்து வடை, பருப்பு வடை, கீரை வடை இப்படி நிறைய வகை வடைகள் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கொரோனா வடை என்ற புதிய வடை ரெசிபியை அறிமுகம் செய்துள்ளார் இளம் பெண் ஒருவர். கொரோனா தான் உடலுக்குக் கெட்டது, வேகவைப்பதால் கொரோனா வடை நல்லது என்றும் நெட்டிசன்கள் இந்த வடையைப் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வடை ரெசிபி இதுதாங்க:
முதலில் ஒரு கப் அரிசி மாவு. அந்த மாவை தவாவில் லேசாக சூடாக்கி அத்துடன் சீரகம், உப்பு சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைகிறார். அதன் பின் ஸ்டஃபிங் தயாராகிறது. மசித்த உருளைக்கிழங்கை ஒரு கடாயில் போடுகிறார். கூடவே பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், குடை மிளகாய், கறிவேப்பிலை மற்று சில மசாலா தூள்கள் சேர்க்கிறார்.
Corona vada! Bharat ki naari sab par bhaari! .@arindam75 pic.twitter.com/sf1zoLPih2
— Mimpi🍁 (@mimpful) January 19, 2022
பின்னர் பிசைந்து வைத்த அரிசி மாவை கையில் பரப்பி அதனுள் ஸ்டஃபிங்கை வைக்கிறார். பின்னர் அதை பந்துபோல் உருட்டிக் கொள்கிறார்.
இன்னொரு பாத்திரத்தில் ஊற வைத்த அரிசி இருக்கிறது. அதை வடிகட்டி ஒரு தட்டில் தண்ணீரில்லாமல் பரப்பிவிடுகிறார். இந்த உருண்டையை அந்த அரிசியில் அப்படியே புரட்டிவிட்டு எடுக்கிறார். பின்னர் அந்த உருண்டையை வேக வைக்கிறார். வெளியே எடுத்துப் பார்த்தால் அச்சு அசல் ஸ்பைக் வைத்த கொரோனாவைப் போலவே இருக்கிறது.
இந்த ரெசிபி இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
When life gives you corona, make corona vada 😅 https://t.co/xGlcEe76or
— Veera M. Rajagopal (@doctorveera) January 20, 2022
இந்த வீடியோவைப் பகிரும் நெட்டிசன்கள் நையாண்டி கமென்ட்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
@WHO see this!
— Vijayendra (@porgamumbaicha) January 20, 2022
This is how we defeat Covid!😎 https://t.co/msQMjFXyxe pic.twitter.com/hANiAtEUmW
இதுதான் கொரோனாவுடன் வாழப் பழகுதல் என்றொரு நெட்டிசன் கமென்ட் செய்துள்ளார். இன்னொரு ட்விட்டராட்டியோ, பார்க்க நல்லா இருக்கு, நான் செய்து பார்த்தேன் ருசியாக இல்லை என்று கூறியுள்ளார்.