Oats Beetroot Masala Dosa: தோசை பிரியரா? சுவையான ஓட்ஸ் - பீட்ரூட் மசாலா தோசை ரெசிபி இதோ!
Oats Beetroot Masala Dosa:ஓட்ஸ் - பீட்ரூட் மசாலா தோசை செய்வது எப்படி என்று காணலாம்.
சிலருக்கு எடை குறைக்க போராடுவது, சாத்தியமே இல்லாததாக கூட தோன்றாலாம். ஜிம் செல்வது, உடற்பயிற்சி, இரண்டோடு என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். உடல் எடையை குறைப்பதில் சாப்பிடும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சாப்பிடாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். சத்தான மற்றும் நிறைவான உணவுகளில் கவனம் செலுத்துங்கள். அப்படியான உணவுப் பொருட்களில் ஒன்று ஓட்ஸ்..
ஓட்ஸ் தோசை, ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் ஆம்லெட் என செய்து சாப்பிடலாம். பீட்ரூட் ஓட்ஸ் தோசை எப்படி செய்வது என்று காணலாம்.
ஓட்ஸ் நன்மைகள்:
தினமும் ஒருமுறை ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வது நலனுக்கு நல்லது என ஊட்டச்சத்து நிபுணர் அபர்ணா பரிந்துரைக்கிறார். ”ஓட்ஸ் எடை குறைக்க உதவுகிறது. தினமும் பழங்களுடன் சாப்பிட்டு வந்தால், அவை பலனளிக்கும். அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்கும்.” என்று அவர் சொல்கிறார். மேலும், உடல் எடை குறைக்க வேண்டாம் என்பவர்களும் ஆரோக்கியத்திற்காக இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஓட்ஸ் சாப்பிடலானம் என பரிந்துரைக்கிறார்.
ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கன் ஃபைபர் எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்.டி.எல். கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
பீட்ரூட் ஏன் முக்கியம்?
பீட்ரூட் உங்கள் டயட்டில் இருக்க வேண்டிய மற்றொரு அருமையான காய்கறி. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் கலோரி குறைவாக இருப்பதால், எடை குறைக்கும் உதவும். அதோடு, ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இது ஹீமோகுளோபின் குறைபாடுகளை சமாளிக்க உதவும். பீட்ரூட்டை சாலட், சூப், தோசை, சட்னி உள்ளிட்ட வகைகளில் செய்து சாப்பிடலாம்.
ஓட்ஸ் - பீட்ரூட் தோசை:
என்னென்ன தேவை?
ஓட்ஸ் - ஒரு கப்
ரவை - ஒரு கப்
பீட்ரூட் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பனீர் - ஒரு கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
முதலில் தோசைக்கு தேவையான மசாலாவை தயார் செய்து வைக்கலாம். வெங்காய், தக்காளி ஆகியபற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். இப்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கூடானதும், அதில் சீரகம்,பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு, தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் உப்பு, மிள்காய் தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் கொதித்ததும் அதில் துருவிய பனீர் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இது நன்றாக கொதித்ததும் பனீர் மசாலா தயார்.
பீட்ரூட் தோசை தயாரிக்க..
ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் ஓட்ஸ் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைக்கவும். இதில் ரவை சேர்த்து அதையும் வறுத்து ஆற வைக்கவும். இப்போது பீட்ருட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஓட்ஸ், ரவை, பீட்ரூட் எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்தால் தோசை மாவு தயார்.
தோசை கல்லில் தோசை ஊற்றி, அதன் மேல் பனீர் மசாலா வைத்து தோசை பொன்னிறமாக வேக விடவும். சுவையான பீட்ரூட் ஓட்ஸ் மசாலா தோசை தயார்.
கொத்தமல்லி சட்னி
உளுந்து, பச்சை மிளகாய், சிறிதளவு சீரம், ஒரி கைப்பிடி அளவு கொத்தமல்லி எல்லாவற்றையும் நன்றாக வதக்க வேண்டும். அது ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் கொத்தமல்லி சட்னி தயார். மிக்ஸியில் வெகு நேரம் அரைக்க கூடாது. அப்படி செய்தால் சட்னியில் கசப்புத்தன்மை ஏற்படும்.