News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

காலையில ஆரோக்கியமா சாப்பிடுங்க! ஒரு ஸ்பூன் நெய்யில் மொறு மொறு காய்கறி ஊத்தாப்பம்!

சிலர் தங்களின் டயட் சமயங்களிலும் கூட இதனை எடுத்துக்கொள்கின்றனர்.

FOLLOW US: 
Share:

ஊத்தாப்பம் :

இந்தியர்களின் பிரதான உணவுகளில் ஒன்றாக இருப்பது ஊத்தாப்பம் . இதில் பல  வகை உண்டு. இதை கல் தோசை என்றும் சொல்வார்கள்.  ஊத்தாப்பம் காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஊத்தாப்பம் சுவையானது அதே சமயம் அதில் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. மேலும் ஊத்தப்பத்தை சாப்பிட உங்களுக்கு சட்னி , சாம்பார் தேவைப்படாது. அதில் உள்ள டாப்பிங்ங்ஸே உங்களுக்கான ஃபிளேவர்களை கொடுத்துவிடும். மற்ற உணவுகளை விட ஊத்தாப்பம் வயிற்றை நிறைக்க கூடியது என்பதால் , சிலர் தங்களின் டயட் சமயங்களிலும் கூட இதனை எடுத்துக்கொள்கின்றனர். உடல் ஆரோக்கியத்தில் காய்கறி ஊத்தாப்பம் சிறந்தது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அர்ஜிதா சிங்

View this post on Instagram
 
A post shared by ᴀʀᴊɪᴛᴀ ꜱɪɴɢʜ | Nutritionist (@we_nourish)

காய்கறி ஊத்தாப்பம்  செய்முறை :

  • முதலில் உங்களுக்கு தேவையான காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அது வேண்டாம் என நினைத்தால் நீங்கள் நேரடியாகவே காய்கறிகளை ஊத்தப்பத்தில் பயன்படுத்தலாம்.  புரத சத்தை பெற விரும்பினால் சிறிதளவு பன்னீரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

  • முதலில்  ஆப்பம் ஊற்றும்  தோசை  பானை  அடுப்பில் வைத்து, தோசை மாவு அல்லது ஊத்தப்பத்திற்காக  தயார் செய்த மாவினை  பானில் ஊற்றிக்கொள்ளுங்கள்.

  • பின்னர் நெய் அல்லது எண்ணெயை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஊத்தாப்பத்தை சுற்றி ஊற்றிக்கொள்ளுங்கள்.

  • பின்னர் வேக வைத்த அல்லது நறுக்கி வைத்த காய்கறிகளை ஊத்தாப்பம் மேலே தூவி விடுங்கள் . 

  • அதன் மீது சிறிதளவு இட்லி பொடி அல்லது மிளகாய் பொடி  அல்லது மிளகு ஆகியவற்றுடன்  சிறிதளவு  உப்பையும்  தூவி விடுங்கள் .

  • அடுப்பை குறைவான தீயில் வைத்து , ஊத்தாப்பத்தை மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக விடுங்கள். ஒரு பக்கம் வெந்த பிறகு ஊத்தாப்பத்தை திருப்பி போட்டு அடுத்த பக்கத்தை 2, 3 நிமிடங்களுக்கு வேக விடுங்கள். 

  • இப்போது மொறு மொறு ஊத்தாப்பம் தயார்.  இதனை நேரடியாகவோ அல்லது புதினா , தேங்காய் சட்னியுடனோ சாப்பிடலாம்.
Published at : 17 Aug 2022 08:54 AM (IST) Tags: crunchy crispy uttapam 1 tsp oil

தொடர்புடைய செய்திகள்

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

டாப் நியூஸ்

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!