Breakfast : காலை உணவை தவிர்க்குறீங்களா? இதையெல்லாம் சேர்க்கலையா? இது ஒரு கெட்ட அலர்ட்..
கொழுப்புகள் இல்லாத காலை உணவு என்பது அதிக அளவு சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். கொழுப்புகள் செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகின்றன.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு காலை உணவு மிக முக்கியம். நீங்கள் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் காலை உணவை தவிர்க்கவோ அல்லது முறையற்ற காலை உணவையோ எடுத்துக்கொள்ளக்கூடாது. அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் ஹைப்பர் கிளைசீமியா முக்கிய உறுப்புகளுக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும் மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். Eatthis portal அறிக்கையின் படி கீழ்க்கண்ட முறையற்ற உணவுப்பழக்கம் உங்களின் சர்க்கரை அளவை தீவிரப்படுத்தலாம்.
காலை உணவை தவிர்த்தல் :
காலை உணவை தவறவிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான D Daniela Jakubowicz நடத்திய ஆய்வின்படி, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை உணவைத் தவிர்த்தால், இரத்தச் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும்.
கொழுப்புச்சத்து தவிர்த்தல் :
கொழுப்புகள் இல்லாத காலை உணவு என்பது அதிக அளவு சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். கொழுப்புகள் செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகின்றன. இது இறுதியில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை குறைக்கிறது.குறைந்த அளவு உட்கொள்ளும் போது கொழுப்புகள் தீங்கு விளைவிப்பதில்லை. கொழுப்பை அதிகமாக உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். இன்சுலின் எதிர்ப்பு என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஒரு நிலை.
View this post on Instagram
புரதச்சத்து தவிர்த்தல் :
அதிக புரத உணவுகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று குறுகிய கால ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், அதிகப்படியான விலங்கு புரதம் தவிர்க்கப்பட வேண்டும். இது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். பீன்ஸ், பருப்பு, மீன் போன்றவை புரதங்களின் சில வளமான ஆதாரங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நார்ச்சத்து தவிர்த்தல்:
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை காலை உணவில் தவிர்க்கவே கூடாது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை இலக்கு வரம்பில் வைத்திருக்க உதவுகிறது.