இந்தியர்களின் சாப்பாட்டில் அதிகளவு பூச்சிக்கொல்லியா? தமிழ்நாடு அரசு பரபரப்பு விளக்கம்
இந்தியர்களின் உடலில் அதிகளவு பூச்சிக்கொல்லி இருப்பதாக வெளியான தகவல் குறித்து தமிழ்நாடு அரசு பரபரப்பு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பெயரில் தகவல் ஒன்று பரவியது. அதில் ஒருவர் உடலில் ஒருநாளில் உடலில் சேரும் பூச்சிக்கொல்லி நச்சுகளின் அளவு விகிதம் வரையறுக்கப்பட்டு இருந்தது. அதில் இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்களின் உடலில் ஒரு நாள் 356.3 மில்லி கிராம் நச்சும், இந்தியாவில் சைவம் சாப்பிடுபவர்களின் உடலில் 362.5 சதவீதம் நச்சும் கலப்பதாக தகவல் வெளியானது.
இந்தியர்களின் உடலில் அதிக பூச்சிக் கொல்லியா?
தமிழ்நாடு அரசு இந்த தகவல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மை கண்டறியும் எக்ஸ் பக்கத்தில் இந்த தகவல் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்த எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது, உலகளவில் இந்தியாவில்தான் தனி நபரின் உடலில் அதிக பூச்சிக்கொல்லி கலந்திருப்பதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்து என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல்.
இந்தியர்களின் உடலில் அதிக பூச்சிக்கொல்லி;
— TN Fact Check (@tn_factcheck) October 29, 2024
தமிழ்நாடு வேளாண் பல்கலை. பெயரில் வதந்தி@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/JiT8HoL6OV
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இதுபோன்ற எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ஐ.நா. சபையின் சர்வதேச உணவு மற்றும் வேளாண் நிறுவனம் ஒரு ஹெக்டேர் நிலத்தில் எந்தளவு பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று நாடுகள் வாரியாக வெளியிட்ட தரவை தவறாக திரித்து ஒரு நபர் உடலில் சேரும் பூச்சிக் கொல்லி என்று வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தாவர பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தில் இயக்குநர் தெரிவித்துள்ளார்.