Rava Paniyaram: பொலபொலன்னு டேஸ்டியான ரவை பணியாரம்.. ஈசியான செய்முறை இதோ...
Rava Paniyaram : சுவையான ரவை பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Rava Paniyaram : பணியாரத்தை காலை உணவாகவும், இரவு நேர உணவாகவும், மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். பணியாரம் பொதுவாக அனைவருக்குமே பிடிக்கும். காரம் மற்றும் இனிப்பு என இருவகையான பணியாரங்களை செய்யலாம். தற்போது நாம் சுவையான ரவை பணியாரம் எப்படி செய்வது என்றுதான் பார்க்க போகின்றோம். இது சட்னியுடன் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதை காற்று புகாதவாறு டப்பாவில் சேமித்து வைத்து 4 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். இதை குறைந்த நேரத்தில் செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பணியாரத்தை விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை – 1 கப்
மைதா – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 3
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு
செய்முறை
ரவையை பாத்திரத்தில் எடுத்து, ரவை மூழ்குமளவு தண்ணீர் சேர்த்து இரண்டு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஏலக்காயை தட்டி எடுத்துக் கொள்ளவும். ரவை தண்ணீரை உள்ளிழுத்து நன்கு ஊறி மிருதுவாகி விடும்.
இப்போது ஊறிய ரவை உடன் மைதா மாவு, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீரைத் தெளித்து பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவை பிசைந்து கொள்ள வேண்டும். ( தண்ணீரை ஒரே முறையில் சேர்த்தால், மாவு நீர்த்துப் போக வாய்ப்புண்டு. இட்லி மாவு பதத்திற்கு மாவை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து பொறித்தெடுக்க தேவையான அளவு எண்ணெயை சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு குழிக் கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவேண்டும்.
வெந்தவுடன் திருப்பிப்போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான ரவை பணியாரம் தயார்.
பணியாரம் ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து 4 ஐந்து நாட்கள் வரை உபயோகிக்கலாம்.
மேலும் படிக்க
Makhana Payasam: பொங்கல் ஸ்பெஷல் ரெசிபி! சுவையான தாமரை விதை பாயாசம் செய்முறை இதோ!
Broccoli Soup: உடல் எடை பேலன்ஸ் பண்ணனுமா? ஆரோக்கியம் மேம்பட ப்ரோக்கோலி சூப்.. இதோ ரெசிப்பி
Kadalai Paruppu Payasam: கடலை பருப்பு பாயாசம் அசத்தலாக செய்வது எப்படி?