தொடங்கியது ரமலான் மாத நோன்பு காலம்… நோன்பு நேரத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க டயட் இதோ!
இந்த புனித மாதத்தின் கொண்டாட்டங்களில் நோன்பு முதன்மையாக இருப்பதால், உணவுப் பழக்கம் தொடர்பான சில குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளை கடைபிடிப்பது நோன்பு இருக்கும் உடலை சீராக வைத்திருக்கும்.
இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தை ஒரு மாத கால நீண்ட நேர நோன்பை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர். மேலும் இந்த நேரத்தில் அல்லாஹ் புனித குர்ஆனை முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தியதாக நம்பப்படுவதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த புனித மாதத்தின் கொண்டாட்டங்களில் நோன்பு முதன்மையாக இருப்பதால், உணவுப் பழக்கம் தொடர்பான சில குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளை கடைபிடிப்பது நோன்பு இருக்கும் உடலை சீராக வைத்திருக்கும். ரமலான் மாதத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க பின்பற்றக்கூடிய சில உணவு குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.
நிறைய திரவங்களை குடிக்கவும்
ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும், நோன்பு விடியற்காலையில் செஹ்ரி என்ற உணவோடு தொடங்கி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இப்தார் என்ற உணவோடு முறிக்கப்படுகிறது. இரண்டு உணவுகளுக்கு இடையில், உங்களை நீரேற்றத்துடன் வைத்திருப்பதும், உடலில் நீரேற்ற அளவைப் பராமரிப்பதும் முக்கியம். அதனால் நோன்பு தொடங்குவதற்கு முன்னும், முடிந்த பின்னும், வழக்கத்திற்கு அதிகமாக தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை குடிக்கவும்.
செஹ்ரி உணவில் கவனம் தேவை
செஹ்ரி என்பது கவனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உணவு. நீங்கள் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து, நாள் முழுவதும் உங்களைத் நகர்த்த தேவையான ஆற்றலை வழங்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், கொண்டைக்கடலை, பருப்பு போன்ற சில கார்போஹைட்ரேட்டுகளை சேர்த்து முயற்சி செய்வது, நீங்கள் நீண்ட நேர ஆற்றலைப் பெற உதவும்.
சமநிலையான இஃப்தார் உணவு
நோன்பை முறித்து இப்தாருடன் தொடங்குவதற்கான பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான வழி பேரீச்சம்பழம் சாப்பிடுவது. அதுவே நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரம். தேவையான வைட்டமின்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களின் அளவை சமப்படுத்த, மெலிந்த இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம். இருப்பினும், நீங்கள் அதிகமாக சாப்பிடாமல், அளவாக, மெதுவாக சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அளவான உப்பு
உங்கள் உணவில் உப்பு அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமான உணவின் விளைவுகளை எதிர்கொள்ளும். உணவில் சோடியத்தின் அளவு அதிகரிப்பது குடலில் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் உண்ணாவிரதக் காலத்தில் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்
தயிர் உடலுக்குள் நல்ல பாக்டீரியாக்களின் வருகையைத் தூண்டும் ஒரு சிறந்த வழியாகும். இதன் விளைவாக, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் இரவு முழுவதும் வயிற்றை லேசாக வைத்திருக்கும். இஃப்தாருடன் நோன்பு திறக்கும் போது தயிர் உங்கள் உணவின் ஒரு பகுதியாக இருப்பது நல்லது.