Pepper Chutney: இட்லி, தோசைக்கு சூப்பர் காம்போ! மிளகு சட்னி இப்படி செய்து பாருங்க!
சுவையான மிளகு சட்னி எப்படி செய்வதென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
இட்லி, தோசைக்கு வழக்கமாக சாப்பிடும் சட்னி சாம்பார் சாப்பிட்டு சளித்து விட்டதா? சுவையான ஏதேனும் டிஷ்சை புதிதாக முயற்சிக்க விரும்புகின்றீர்களா? அப்போ இந்த மிளகு சட்னியை ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த சட்னியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வர மிளகாய் -2, பூண்டு பல் - 10, வெங்காயம் - 1, தக்காளி - 3, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு -தேவையான அளவு.
செய்முறை
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின் அரை டீஸ்பூன் அளவிற்கு சீரகம், இரண்டு வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
மிளகாய் லேசாக வறுபட்டதும் பூண்டு பற்கள், பொடிப்பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்கிய பின்பு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
இவை வதங்கியதும், தேங்காய் துருவல் சேர்த்து வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து விட வேண்டும்.
பின் இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இதை சட்னி உடன் சேர்த்து விட வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான மிளகு சட்னி தயார். இதை இட்லி தோசை உடன் சேர்த்து பறிமாறினால் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க