
Onam Sadhya 2024: ஓணம் ஸ்பெஷல் சாப்பாடு.. இந்த வகைகள் எல்லாம் டாப்
Onam Sadhya 2024: ஓணம் பண்டிகை நாளில் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகைகள் (ஓணம் சத்யா) பற்றி இங்கே காணலாம்.

கேரளாவில் கொண்டாடப்படும் அறுவடை திருநாள் ஓணம் (Onam). இது வெறும் அறுவடை திருநாள் மட்டுமல்ல கேரள மக்களின் பாரம்பரிய கலாச்சார அடையாளமாக உள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கி செப்டம்பர்,15 ம் தேதி முக்கிய பண்டிகையான திருவோணம் கொண்டாடப்படுகிறது. இது அறுவகை திருநாள் என்பதை விட மக்கள் ஒன்று கூடி உணவுகளை பகிர்ந்து, கொண்டாடி மகிழ்வதாக உள்ளது.
ஓணம் பண்டிகையின் பூக்கோலத்தை போலவே சத்யா என்றழைக்கப்படும் உணவு வகைகளை எப்படி விட்டில் தயாரிக்கலாம் என்று பற்றி இங்கே காணலாம்.
ஓணம் பண்டிகை:
ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடுகின்றனர். மலையாளத்தில் சிம்ம மாதமான Drik Panchang-ன்படி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை என 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் மிகப்பெரிய திருவிழாவான திருவோண நட்சத்திரத்தில் வரும் திருவோண பண்டிகை நாள் வரும் 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
ஓணம் அத்தப்பூ கோலம், அலங்காரம் உள்ளிட்ட பலவற்றை குறிப்பிட்டாலும் சுவையான விருந்தான ‘ஓணம் சத்யா’ (Onam Sadhya) என பல வகையான உணவு வகைகள் தயாரிக்கலாம்.
ஓணம் சத்யா உணவுகளை வீட்டில் தயாரிப்பது பற்றி காணலாம்.
உணவு என்பது ஒரு கலாசாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கேரள உணவு வகைகள் என்றால் யாருக்குதான் பிடிக்காது என்பார்கள். கேரளாவில் சமையல் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். நெய், முந்திரி மற்றும் தேங்காய்ப் பால் போன்ற பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான முறையில் சத்யா உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சத்யாவில் குறைந்தது 26 வகையான உணவுகளாவது இருக்கும். அதிகபட்சமாக 64 உணவுகள் வகைகள் வரை மதிய உணவு பரிமாறப்படும். அன்றைய தினம் அறுசுவை உணவு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என வாழை இலையில் இருக்கும். சோறு, துவரம்பருப்பு, நெய், வாழைப்பழம், கூட்டுக்கறி, ரசம், மோர், இனிப்பு, அவியல், கிச்சடி, பச்சடி, ஓலன், காளான், கறி, அப்பளம், என வகை வகையாக இருக்கும்.
சத்யா உணவுகள் ஆரோக்கியமானதாக, குறைந்த அளவு மசாலா, வீட்டில் தயாரித்த மசாலா வகைகள் கொண்டு தயார் செய்யப்படுகிறது.
சத்யாவில் சிவப்பு அரிசி அல்லது பழுப்பு அரிசி இடம்பெறும். கெட்டியான பருப்பு, புளி தக்காளி, ரசம், காய்கறிகளுடன் சாம்பார் என உணவுகள் லிஸ்ட் ரொம்ப பெருசு.
சாதத்தைப் பொறுத்தவரையில் கேரளா மட்டா அரிசி என்பது பாரம்பரிய ஒன்றாக இருக்கிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தையாமின், நியாசின், மாங்கனீஸ், பி.காம்ப்ளக்ஸ் ஆகிய வைட்டன்கள் நிறைந்துள்ளன.
நெய், பருப்பு:
ஓணம் சத்யா உணவில் புரதச்சத்து நிறைந்த பருப்பு, வைட்டமின் ஏ, டி, மற்றும் ஈ நிறைந்த நெய் என இருக்கும்.
கறி வகைகளில் இஞ்சி வைத்து செய்யப்படும் கறி இடம்பெறும். இஞ்சி ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்தது.செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது.
காலன்
தயிர், தேங்காய், நேர்துர வாழைப்பழம் அல்லது கிழங்குகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் பாரம்பரிய உணவு.
அவியல்
கேரட், பீன்ஸ்,உருளை, பட்டாணி உள்ளிட்ட பலவகையான காய்கறிகளுடன் குறைந்த அளவில் மசாலா சேர்த்து தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் தாளித்து செய்த அவியல்..
ஓலன்
கேரள பாரம்பரிய உணவு ஓலன். மசாலா ஏதும் சேர்க்காமல் பரங்கிக் காய், பட்டாணி, தேங்காய் பால் கலந்து செய்யப்படும் ஒரு உணவு.
கூட்டுக்கறி - இரண்டு வாழைப்பழம் அல்லது கிழங்கு சேர்த்து சமைக்கப்படும் உணவு.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

