ஹெல்தியான No Bake ப்ரெளனி; எளிதாக செய்யலாம் - ரெசிபி இதோ!
No bake chocolate brownie: பேரீச்சம் பழத்தில் ப்ரெளனி செய்வது எப்படி

ப்ரெளனி பிடிக்குமா? 15 நிமிடங்களில் எளிதாக தயாரிக்க கூடிய ரெசிபி இதோ. வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம்.
சாக்லெட் ப்ரெளனி
என்னென்ன தேவை?
பேரீச்சம் பழம் - ஒரு கப்
Cocoa பவுடர் - அரை கப்
Peanut Butter - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பேரீச்சம் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கவும். Cocoa பவுடர், Peanut Butter , சிறதளவு உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை ஒரு ட்ரேயில் சேர்த்து துருவிய நட்ஸ் மேலே தூவி 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்து சுவைக்கலாம். Bake செய்யாமல், ஆரோக்கியமான ப்ரெளனி தயார்.
பேரீச்சம் பழம்:
பேரீச்சம் பழத்தில் வைட்டமின்,நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன.
சூப்பர் ஃபுட்:
பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடு நீங்க பேரீச்சம் பழம் சாப்பிடலாம். இதில் கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் நிறைந்திருக்கின்றது. பெண்களின் எலும்புகள் பலவீனம் ஆகாமல் பாதுகாக்கும். இதனை சரிசெய்ய, பேரிச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
View this post on Instagram
பேரிச்சம்பழத்தை பால் உடன் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறியபிறகு, அதை சாப்பிட்டால், சளி, இருமல் குணமாகும். சத்து மாவு உருண்டை, ஸ்மூத்தி உள்ளிட்டவற்றை தயாரிக்கும்போது இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழத்தை சேர்க்கலாம். தினமும் இரண்டு பேரீச்சம் பழத்தை சாப்பிடுவது நல்லது.
நட்ஸ் மில்க்ஷேக்:
பாதாம், பிஸ்தா, முந்திரி, சியா விதைகள், பேரீச்சம் பழம் சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இவற்றில் பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், பேரீச்சம் உள்ளிட்டவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து ஸ்மூதி போல வந்ததும், அதோடு சியா, சூரியகாந்தி, பூசணி விதைகள் சேர்த்து அருந்தலாம். இதை காலை உணவோடு சேர்க்கலாம். வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றிற்கு பதிலாக பேரீச்சம் பழம் சேர்ப்பது ஆரோக்கியமானது.
குளிர் காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும். உடக்கு தேவையான வைட்டமின் டி கிடைப்பதில் குறைவாக இருக்கும். எலும்புகளுக்கு வலுசேர்க்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது. கால்சியம் சத்தும் தேவைப்படும். பேரிச்சம்பழம் சாப்பிடுவது எலும்புகள் உறுதியாகும். பற்களின் ஆரோக்கியம் மேம்படவும் முக்கியம். குளிர்காலங்களில் மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம். பேரிச்சம்பழத்தில் மெக்னீஷியம் இருப்பதால் மூட்டு வலி சரியாக உதவும்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

