Chana Palak Rice Recipe: கொண்டைக்கடலை, பாலக்கீரை ரைஸ் எப்படி செய்வது? இப்படித்தான்!
Chana Palak Rice Recipe: கொண்டைக்கடலை, பாலக்கீரை புலாவ் ரெசிபி இது.
கொண்டைக்கடலை, பாலக்கீரை இரண்டையும் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்காலம். உணவில் தினமும் கீரை இடம்பெற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏதாவது ஒரு தானிய வகையும் இருந்தால் நல்லது,
என்னென்ன தேவை?
வேகவைத்த கொண்டைக்கடலை - ஒரு கப்
அரைத்தெடுத்த பாலக்கீரை விழுது - ஒரு கப்
ஊற வைத்த அரிசி - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
எண்ணெய்- தேவையான அளவு
கரம் மசாலா - அரை டீ ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பச்சை ஏலக்காய் - 2
கிராம்பு - 1
கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை நன்றாக வேகவைத்து தனியே வைக்கவும். சுத்தம் செய்யப்பட்ட பாலக்கீரையை மிக்ஸியில் கொஞ்சம் அரைத்தெடுக்கவும்.
குக்கர் அல்லது பாத்திரம் பயன்படுத்தலாம். அடுப்பில் மிதமான தீயில், குக்கரை வைத்து எண்ணெய் அல்லது நெய் 4 டேபிள் ஸ்பூன் ஊற்றவும். நெய் சூடானதும் அதில், பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பாலக்கீரை விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பாலக்கீரை கொஞ்ச்ம நிறம் மாறியதும் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து, கரம் மசாலா, உப்பு சேர்த்து கலக்கவும். இதோடு, ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வர விடவும். இந்த முறையில் செய்ய கொண்டைக்கடலை வேக வைக்காமலும் சேர்க்கலாம். புலாவ் மாதிரி செய்யும் முறை. ரைஸ் மாதிரி செய்ய வேண்டும் என்றால் அரிசியை வேக வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் செய்வதானால், 20-30 நிமிடங்கள் வரை வெந்ததும் கொண்டைக்கடலை பாலக்கீரை சாதம் ரெடி.
பனீர் பராத்தா
பனீர் பலருக்கும் ஃபேவரைட். பனீர் வைத்து விதவிதமான டிஷ் செய்யலாம். பாலக்கீரை பனீர் பராத்தா செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - இரண்டு கப்
பாலக்கீரை - ஒரு கட்டு
இளஞ்சூடான நீர் - ஒரு கப்
ஓமம் - ஒரு ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
ஸ்டஃப்பிங்
பனீர் - 200 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய பொடியாக நறுக்கியது - 1
மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவில் வேக வைத்து அரைத்த பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும்.
ஸ்டஃப்புங்கிற்கு பனீரை துருவி கொள்ள வேண்டும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.
மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
சுட சுட பாலக் பனீர் பராத்தா, தயிர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.