மேலும் அறிய

Muttai Koththu : குட்டி குட்டியா.. முட்டை கொத்து.. காலை உணவுக்கு சூப்பர் ரெசிப்பி இதோ..

அவித்த முட்டை,முட்டை பொரியல், பிரட் ஆம்லெட்,ஆஃப் பாயில் மற்றும் ஆம்லெட் என நிறைய வகைகளை உடனடியாக செய்வதற்கான வசதிதான் முட்டையில் இன்னொரு சிறப்பம்சமாகும்.

முட்டை என்பது,பரவலாக அனைவராலும் உண்ணப்படும் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். முட்டையை சைவம் என்று சொல்லுபவர்களும் உண்டு. அந்தளவிற்கு முட்டையானது, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. கடைகளில் நாம் வாங்கும் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகள் என அனைத்திலும் முட்டையானது கலந்து இருக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த முட்டையின் வெள்ளை கரு,மிகவும் பிரதானமான ஒரு உணவு பொருளாகவும்,

இப்படி சமைக்க எளிதாகவும், பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் இந்த முட்டையை கொண்டு,உடனடியாக சமையல்களை செய்யலாம். அவித்த முட்டை,முட்டை பொரியல், பிரட் ஆம்லெட்,ஆஃப் பாயில் மற்றும் ஆம்லெட் என நிறைய வகைகளை உடனடியாக செய்வது இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.

இத்தகைய முட்டையானது, ஒவ்வொரு பகுதியிலும்,ஒவ்வொரு விதமாக செய்யப்படுகிறது. நாம் இங்கு முட்டை பொரியல் என்று சொல்வதை,மும்பை போன்ற நகரங்களில் புர்ஜி என்று அழைக்கிறார்கள்.

இத்தகைய முட்டை பொரியல் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

நான்கு அவித்த முட்டை,நறுக்கிய வெங்காயம்,நறுக்கிய தக்காளி, வேகவைத்த பச்சை பட்டாணி,நறுக்கி வைத்த  தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சிறிதளவு என இவற்றை தேவையான அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். கரம் மசாலாத்தூள் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். கருவேப்பிலை சிறிது  புடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் இதை போலவே  மல்லி இலைகளையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வேக வைக்காத பச்சை முட்டை நான்கு,உப்பு மஞ்சள்  மற்றும்  மிளகுப்பொடி தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.

பின்னர்,ஒரு வாணலியில்,சிறிது  எண்ணெயை விட்டு, அதில்  கடுகு மற்றும் உளுத்தம் பயிறு சிறிதளவு போட்டு தாளித்துக் கொள்ளவும். சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலையை அதில் போட்டு, வதக்கிக் கொள்ளவும்.

இதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.இதன் பின் தக்காளியை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அதில் தேவையான அளவு கரம் மசாலாத்தூளையும்,சிறிதளவு மிளகு தூளையும் போட்டு,நன்றாக தக்காளி வதங்கி வரும் வரை வதக்கவும்.பின்னர் இதில்  நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை சேர்க்கவும்.

ஏற்கனவே வேக வைத்து வைத்திருக்கும்,பச்சை பட்டாணியை, இந்த மசாலாக்கள் நன்றாக வதங்கி, வாசம் வந்த பிறகு,அதில் சேர்த்து கலக்கவும்.பின்னர் இதில்,அவித்த முட்டைகளை,சிறுசிறு துண்டுகளாக நறுக்கி,இந்த கலவையில் இட்டு, தேவையான அளவு உப்பை சேர்த்து வதக்கவும்.முட்டையுடன் ஏனைய பொருட்கள் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து பொன்னிறமாகும் வரை சிறிது எண்ணெயை விட்டு வதக்கவும்.இப்போது சுவையான முட்டை பொரியல் என்று சொல்லப்படும் புர்ஜி தயாராகிவிட்டது. 

இந்த முட்டை பொரியலை வேக வைக்காத முட்டைகளைக் கொண்டும் செய்யலாம். வேக வைக்காத பச்சை முட்டை  நான்கு எடுத்து, ஒரு பாத்திரத்தில்   முட்டையை  ஊற்றி,தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் பொடி கலந்து,நுரை வரும் அளவிற்கு நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். முன்னர் சொன்ன சமையல் முறையில்,அவித்து,துண்டு துண்டாக நறுக்கிய,முட்டைகளை போடுவதற்கு பதிலாக,நன்கு அடித்து வைத்திருக்கும் இந்த முட்டை கலவையை ஊற்றி,நன்றாக வதக்கி எடுத்தீர்களேயானால்,மற்றும் ஒரு வகை முட்டை பொரியல் தயார்.

இதற்கு,வெண்ணெய் சேர்த்து சமைத்த,பிரட் துண்டுகள்,மிகவும் பொருத்தமான உணவாக இருக்கும். வட இந்தியாவில்,பிரட்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக,பாவ் பஜி என்று சொல்லப்படும் மற்றும் ஒரு வகை பிரட்டை பயன்படுத்துகிறார்கள்

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget