மேலும் அறிய

”தங்கபஸ்பம்” என அழைக்கப்படும் செம்பருத்தி! ஒருமுறை இந்த ஜூஸ் குடித்தால் போதும்!

செம்பருத்தி பூக்களுடன் ஆரஞ்சு, மாதுளை, நெல்லிக்காய், பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கலாம். இப்படி சாப்பிட விரும்பாதவர்கள் செம்பருத்தி பூ தோசை, கூட்டு, பொறியல் செய்து சாப்பிடலாம்

உங்களுக்கு  இதய நோய் பிரச்சனை இருக்கிறதா? கவலையை விடுங்க. தங்கபஸ்பம் ஜூஸ் இருக்கிறதே. அதை குடித்தாலே போதும். அது பார்த்துக் கொள்ளும். 

செம்பருத்தி பூ:

என்னது தங்க பஸ்பமா? அப்படி தானே கேட்கிறீர்கள். அது வேற ஒன்றும் இல்லை. செம்பருத்தி பூ தான். அந்த காலத்தில் செம்பருத்தி பூவை தங்க பஸ்பம் என சித்தர்கள் அழைத்துள்ளனர். பூ, இலை என அனைத்தும் மருத்துவ குணங்களை பெற்றிருப்பதால் அதை தங்க பஸ்பத்துக்கு ஈடாக சித்தர்கள் பார்த்துள்ளனர். நமது வீடுகளில் எளிமையாக கிடைக்க கூடிய ஒரு பூ தான் செம்பருத்தி.

செம்பருத்தியின் தாயகம் கிழக்கு ஆசியாவாக இருந்தாலும், இந்தியா மற்றும் இலங்கையில் சாதாரணமாகவே கிடைக்கும் ஒரு பூ வகை. இந்த பூ அதிகமாக இந்தியாவில் இருந்தாலும், மலேசியாவின் தேசிய மலராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மலேசியா மட்டும் இல்லை, சீனா செம்பருத்தியை சீன ரோஜா என கூறி உரிமை கொண்டாட மல்லுக்கு நிற்கிறது. 

மருத்துவ குணம்:

இப்படி எல்லை தாண்டி நாடுகள் போட்டிப்போடும் அளவுக்கு மவுசு அதிகம் செம்பருத்திக்கு. ஆனால், நாம் தான் அதை சாதாரணமாக நினைத்து தூக்கி எறிந்து விடுகிறோம். சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை, ஆரஞ்சு நிறங்களில் செம்பருத்தி பூக்கள் உள்ளன. ஆனாலும், சிவப்பு நிற பூக்களில் தான் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.  செம்பருத்தியில் ஆன்டி ஆக்சிடன், குளுக்கோசைடுகள், கரோட்டின், மால் வாலிக் அமிலம், சயனின், தயாமி, ரிபோபிளேவின் நியாசின் உள்ளிட்ட வேதி பொருட்கள் உள்ளன. இதனால் உச்சந்தலை முடியில் இருந்து பாதம் வரையிலான நோய்களுக்கு அரும்பருந்தாக இந்த தாவரம் உள்ளது. 

செம்பருத்தி இலை முடி நன்கு வளர்வதற்கு உதவும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், செம்பருத்தி பூ இதய நோயை குணப்படுத்தும் என்பதும் அதன் கூடுதல் சிறப்பு. இதயம் பலவீனமானவர்கள், இதய அடைப்பு உள்ளவர்கள் செம்பருத்தி பூவின் ஜூஸ் அல்லது செம்பருத்தி பூ டீ குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். செம்பருத்தி பூ ஜூஸ் எப்படி செய்வது என்ற கவலை வேண்டாம். சில டிப்ஸ் உங்களுக்குக்காக....

செம்பருத்தி பூ ஜூஸ்:

10 செம்பருத்தி பூக்களை எடுத்து கொண்டு அதன் மகரந்தத்தை நீக்கி விட்டு, குளிர்ந்த நீரில் கவிழு எடுத்து கொள்ள வேண்டும். அந்த பூக்களை மிக்ஸி அல்லது உரலில் வைத்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அரைத்த செம்பருத்தி பூ வழவழப்பு தன்மையுடன் இருக்கும். அதனால், சுத்தமான காட்டன் துணியை வைத்து அரைத்த செம்பருத்தி பூவின் சாற்றை, தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.

அந்த சாற்றுடன் சிறிதளவு இன்றி சாறு மற்றும் ஒரு எலுமிச்சை சாறு அல்லது நெல்லிக்காய் பிழிந்து அதனுடன் சேர்க்க வேண்டும். எலுமிச்சைச்சாறு சேர்த்ததும் செம்பருத்தி சாறின் நிறம் இளம்சிவப்பாக மாறும். பின்னர், தேவைக்கு ஏற்ப தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கூடுதலாக சப்ஜா விதைகளையும், சிறிது புதினா இலைகளையும் சேர்த்து கொள்ளலாம். 

சிறந்த நிவாரணி:

இந்த ஜூஸை வாரத்தில் 3 முதல் 5 முறை குடித்து வந்தால் இதய பலப்படுவதுடன், ரத்த குழாய் அடைப்பு பிரச்சனை சரியாகும். உடலின் ரத்தம் சுத்தப்படுத்தப்படும். ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்க செய்யும். இப்படி ஜூஸ் போல் குடிக்க விரும்பாதவர்கள் செம்பருத்தி பூவை ஒரு லிட்டர் நீரில் போட்டு அதன் அளவு பாதியாகும் வரை சுண்ட காய்ச்சி, குடிநீராக பயன்படுத்தலாம். அவ்வாறு குடித்து வந்தால் உடல்சூடு தணிக்கப்படுவதுடன், காய்ச்சலுக்கும் சிறந்த நிவாரணமாக இருக்கும். 

செம்பருத்தி பூக்களுடன் ஆரஞ்சு, மாதுளை, நெல்லிக்காய், பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸ் செய்தும் குடிக்கலாம். இப்படி சாப்பிட விரும்பாதவர்கள் செம்பருத்தி பூ தோசை, கூட்டு, பொறியல் செய்தும் உணவில் சேர்த்து கொள்ளலாம். இதுவும் விடும்பாதவர்கள் செம்பருத்தி பூவை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு, ஒரு டம்பளர் பசும்பால் குடித்து வந்தால், 40 நாட்களில் கடுமையான நோய் குணமாக வாய்ப்புண்டு. செம்பருத்தி பூ மாதவிடாய் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஆகும். மாதவிடாய் சரியாக வராத பெண்கள் செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் அதற்கும் தீர்வு கிடைக்கும். 

உணவே மருந்து என வாழ்ந்து வரும் நமது பாரம்பரிய கலாச்சாரத்தில் ஒவ்வொரு மூலிகை குறித்தும் சித்த மருத்துவ பாடல்கள் உண்டு. அந்த வகையில் செம்பருத்தி குறித்த சித்த மருத்துவப் பாடலும் ஒன்று உள்ளது. 

"செம்பருத்தை மேக வெட்டை தீரா பிரமியொகு
வம்பிரத்த வெள்ளை வழவழப்பும் வெப்பும்
பெரும்பாடு ரத்த பித்த பேதம் அகற்றும்
கரும்பு மொழி மயிலே காண்"

இனியாவது வீடுகளில் இருக்கும் செம்பருத்தியை அலட்சியம் செய்யாமல் அதை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget