மேலும் அறிய

Cardamom Benefits : தினமும் 3 ஏலக்காய் போதும்.. இந்த அசெளகரியங்களுக்கு பலன் இருக்கலாம்..

மசாலா மற்றும் வாசனைப்பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏலக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

ஏலக்காயைத் தினமும் நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, பருவகாலத்தின் போது ஏற்படும் சளி , இருமல் குணமாக்குவதோடு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம்,  கொழுப்பு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.

நம்முடைய சமையல் அறையில் சைவம், அசைவம் எந்த உணவாக இருந்தாலும் வாசனைக்காகவும், சுவைக்காகவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது வெறும் சுவைக்காக மட்டுமில்லாமல் பல்வேறு மருத்துவக்குணங்களும் இதில் அதிகளவில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஏலக்காய் சாப்பிட்டால், வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், விக்கல், தோல் தொற்று நோய் போன்றவற்றை போக்குகிறது. இத்தனை மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ள ஏலக்காயை தினமும் உணவில் எப்படி பயன்படுத்த வேண்டும்? என்ன விதமான ஊட்டச்சத்துக்கள் இடம் பெற்றுள்ளது என இங்கே நாம் தெரிந்துகொள்வோம்.

Cardamom Benefits : தினமும் 3 ஏலக்காய் போதும்.. இந்த அசெளகரியங்களுக்கு பலன் இருக்கலாம்..

வாசனைத் திரவியமான ஏலக்காயைத் தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குறைந்தது 3 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு சாப்பிட வேண்டும். இதுப்போன்று தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, குறட்டைப்பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது. இதோடு வாயுத் தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்னைகளை சரி செய்கிறது. அதுமட்டுமில்லாமல், ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை அளிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மனநலம் மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு என்றும் கூறப்படுகிறது. மேலும் மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் ஏலக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது. இதுப்போன்று பல்வேறு மருத்துவக்குணங்கள் இதில் அடங்கியுள்ள நிலையில் வேறு என்னென்ன வியாதிகளுக்கு ஏலக்காய் தீர்வாக அமைகிறது என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

ஏலக்காயில் உள்ள மருத்துவக்குணங்கள்:

ஏலக்காயைத் தினமும் நம்முடைய உணவில் அல்லது ஏலக்காய் டீ போன்று செய்து பருகும் போது சளி, இருமல், காய்ச்சலுக்குத் தீர்வாக அமைகிறது.மேலும் உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் நல்ல பலன் அளிப்பதோடு  ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது எனவே இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னதாக, மறக்காமல் ஏலக்காயை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.

பொதுவாக முக்கிய மசாலா மற்றும் வாசனைப்பொருள்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஏலக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. மேலும் ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின்சி, மாங்கனீசு, அத்தியாவசிய எண்ணெய்கள், டயட்டரி நார்ச்சத்துக்கள் பல உள்ளது. எனவே  இவை நிச்சயம் நம்முடைய உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருளாகவே விளங்குகிறது.                                                         

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget