மேலும் அறிய

Curry Leaves Chutney: தலைமுடி ஆரோக்கியமாக வளர.. ஊட்டச்சத்து மிகுந்த கறிவேப்பிலை சட்னி - ரெசிபி!

Curry Leaves Chutney Recipe:தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவும் கறிவேப்பிலை சட்னி செய்முறையை இங்கே காணலாம்.

உணவுப் பழக்கவழக்கங்களும் நமது ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில், உங்கள் உணவில் போதுமான ஊட்டச்சத்து இல்லாவிட்டால், எந்த செய்ற்கையான பொருட்களும் முடியின் ஆரோக்கியத்தை தராது. வாரம் இரண்டு முறை தலைக்கு குளிப்பது, ஹேர்பேக்,மூலிகை எண்ணெய் என எது செய்து முடியை பராமரித்தாலும் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாவிட்டால் பெரிதாக பலன் அளிக்காது என்கின்றனர்.

முடி உதிரும் பிரச்சனை இருப்பவர்கள் கூடுதல் கவனம் எடுத்து உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன. தலைமுடி நரைப்பதை தடுப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்குண்டு. இப்படி பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால், கறிவேப்பிலையை தவிர்காதீர். 

கறிவேப்பிலை சட்னி:

தேங்காய் - ஒரு கப்

கறிவேப்பிலை - ஒரு கப்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

வறுத்த நிலக்கடலை - அரை கப்

பூண்டு - 2 

கிராம்பு - 2

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

புளி - சிறிதளவு

செய்முறை:

வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தோல் நீக்கிய பூண்டு, கிராம்பு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கவும். இவை பொன்னிறமாக வதங்கியதும் தனியே எடுத்து வைக்கவும். 

கறிவேப்பிலை கடாயில் சேர்த்து நன்றாக வதங்கி ஆற விடவும். வதங்க பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதோடு துருவிய தேங்காய், வறுத்த நிலக்கடலை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இறுதியாக உப்பு, புளி சேர்த்து அரைத்து இறக்கினால், கறிவேப்பிலை சட்னி தயார். கடுகு, தாளித்து இட்லி, தோசை உடன் நன்றாக சாப்பிடலாம். 

தலை முடி  வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகள்

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் சி, கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், இரும்பு மற்றும் இதர வைட்டமின்கள் தேவைப்படும்.  அடர்த்தியான மற்றும் நீளமாக முடி வளர உதவும். உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  •  கீரையில் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள கீரை முடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் தலைமுடி ஆரோக்கியம் பாதிக்கப்படும். வாரம் இரண்டு நாள் ஏதாவது ஒரு கீரை வகையை சாப்பிடலாம்.
  •  முட்டை, சிக்கல், சியா, நட்ஸ் உள்ளிட்ட புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். முட்டையில் பயோட்டின் உள்ளது. இது முடி உதிர்வைத் தடுக்கிறது. நமது தலைமுடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அப்போதுதான் முடி வளரும். பயோடின் அளவு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
  • முடி வளர்ச்சிக்கு அவசியமான துத்தநாகம், வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றால் நிரம்பிய பாதாம் தினமும் சாப்பிடலாம்.  அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர விரும்பினால் பாதாம் சிறந்த தேர்வு. பாதாம் முடியை அதன் வேர்களில் இருந்து வளர செய்து, தலை முடி பளபளப்பாகவும் வலுவாகவும் மாற்ற உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், பாதாம் முடி உதிர்வை தடுக்கும்.
  • சியா விதைகள் புரதம் நிறைந்தது. நீளமான முடி வளர்ச்சிக்கு உதவும்.  தலைமுடிக்கு கெரட்டின் கிடைக்க சியா விதைகள் நல்ல தேர்வு. இது முடி உடைவதைத் தடுக்கும்.
  • முடி வளர்ச்சியை அதிகரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தூங்க வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது, உணவுமுறை  உள்ளிட்ட ஆரோக்கியமான வாழவியல் முறையை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்,

பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏபிபி நாடு ஏற்காது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Embed widget