Ghee, Milk Superfoods: நெய், பால் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்? நீங்களே பாருங்க!
நெய் மற்றும் பால் சேர்த்து சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் பெரிய விஷயம் ஆகும். மேலும் அதை இரவில் உட்கொள்வது நல்ல தூக்கத்தை தரும்.
பால் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த பொருள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே போல நெய்யும் ஊட்டச்சத்து மிகுந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்போது இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் நிறைய ஊட்டச்சத்து கிடைக்குமா? ஆமாம் என்கிறார்கள்.
நெய், பால்:
ஊட்டச்சத்து நிபுணர்கள். நெய் மற்றும் பால் சேர்த்து சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் பெரிய விஷயம் ஆகும். மேலும் அதை இரவில் உட்கொள்வது நல்ல தூக்கத்தை தரும். நெய் மற்றும் பால் இரண்டும் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த பொருட்கள் ஆகும்.
தினமும் நெய்யை கொஞ்சமாக உட்கொள்வது உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை மற்ற உணவுகளில் இருந்து எளிதாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல், பால் உங்கள் உடலில் இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவுகிறது.
நெய் பால் உட்கொள்வதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்:
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
நெய் மற்றும் பால் செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டுவதற்கு ஒத்துழைத்து. உடலில் உள்ள சிக்கலான உணவுத் துகள்களை உடைக்க உதவுகிறது. இந்த கலவையானது செரிமானத்தை துரிதப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பாலில் நெய் சேர்வதால் அதிலுள்ள அமிலத்தன்மை குறையும். இது செரிமான அமைப்பில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடல் ஆற்றலை மீட்டெடுக்கிறது.
- மூட்டு வலியைக் குறைக்கிறது
நெய் ஒரு இயற்கை மசகு எண்ணெய் போல செயல்பட்டு, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. இதற்கிடையில், பாலில் கால்சியம் உள்ளது, இது மூட்டு வலியைக் குறைக்கும். அதோடு அந்த கால்சியம் எலும்பு மற்றும் பல் ஆரோக்யத்தையும் மேம்படுத்தும்.
- தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நெய் மற்றும் பால் இரண்டும் இயற்கையான மாய்ஸ்சரைசர்களாக செயல்படுவதால், சருமம் பொலிவுருகிறது. இந்த கலவையானது தோலில் வீக்கம் மற்றும் பருக்கள், முகப்பரு மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
- இருமல் மற்றும் சளி வராமல் தடுக்கிறது
பால் மற்றும் நெய் இரண்டிலும் ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் உள்ளன, அவை தொண்டை புண், இருமல் மற்றும் தும்மல் ஆகியவற்றைக் குறைக்கின்றன. அதனால் இவை இரண்டும், பருவகால நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.
(பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.)