Star Fruit Benefits: கேரம்போலா எனப்படும் ஸ்டார் பழத்தின் நன்மை, தீமைகள் என்ன?
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஸ்டார் பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது ஆகும்.
Star Fruit Benefits in Tamil: ஆசியாவை தாயகமாகக் கொண்ட இந்த ஸ்டார் பழம் ஆனது, புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் காணப்படுகிறது. இந்த பழத்தை குறுக்காக வெட்டி பார்க்கும் பொழுது ஸ்டார் போன்ற அமைப்பில் இருப்பதினால் இது ஸ்டார் ஃப்ரூட் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்டார் பழம்(Star Fruit):
வெப்பமண்டல செடிவகை சார்ந்த இந்த ஸ்டார்பழம் ஆனது, இலங்கை, சீனா, தாய்லாந்து, இந்தியா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் அதிகமாக விளைகிறது.தற்சமயம்,வணிக ரீதியாகவும் இது பயிரிடப்படுகிறது. ஆர்கின் வகையைச் சார்ந்தது ஸ்டார் பழம் ஆனது இனிப்பு சுவையைக் கொண்டிருக்கிறது. கோல்டன் ஸ்டார் போன்ற சில புளிப்பு வகைகளை முழுவதும் பழுக்க வைக்கும் போது இனிப்பு சுவைக்கு மாறுகிறது.
இந்த பழம் காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும் பழமாக மாறும் போது மஞ்சள் நிறத்திலும் மாறுகிறது.
ஸ்டார் ஃப்ரூட்டில்’ நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடெண்ட்டுகள் உள்ளன. அதேநேரத்தில், `நியூரோடாக்ஸின்’ என்ற நச்சுத்தன்மை இதில் இருக்கிறது. ஆகவே வெறும் வயிற்றில் கேரம்போலா எனப்படும் ஸ்டார் பழத்தை சாப்பிடக் கூடாது. சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான சிறுநீரகத்தைக் கொண்ட ஒருவர் இந்தப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதில் உள்ள `நியூரோடாக்ஸின்' விஷத்தன்மையால் பாதிப்புகள் ஏற்படும். அதேபோல இந்த பழத்தை அளவுக்கு அதிகமாகவும் உண்ணக்கூடாது.
சிறுநீரக பிரச்சினை இருப்பவர்களுக்கு நோ:
சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடவே கூடாது. சிறுநீரக கோளாறு இல்லாமல் இயல்பாக இருக்கும் மனிதர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் தலைவலி, தலைசுற்றல், வாந்தி மற்றும் விக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை அதிகரித்து மரணம் கூட ஏற்படலாம். இந்தப் பழத்தில் அதிக அளவில் ஆக்ஸலேட் என்ற தாது உப்பு இருக்கிறது. நமது உடலுக்கு தேவையான ஆக்சிலேட்டை விட மூன்று மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.
கால்சியம், பொட்டாசியம் சத்து:
கால்சியம்,பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் இந்த பழத்தில் அதிக அளவில் இருக்கிறது. இதில் நார்ச்சத்தும்,விட்டமின் சி யும் நிறைந்து காணப்படுகிறது.இது சிட்ரிக் வகை பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு,சாத்துக்குடி மற்றும் திராட்சை குடும்பத்தை சார்ந்ததாகும். இந்த பழத்தை நிறைய நாடுகளில் சமைக்கவும் பயன்படுத்துகிறார்கள். சீனாவில் மீன்களுடன் சேர்த்து சமைக்கிறார்கள்.ஆஸ்திரேலியாவில் காய்கறிகளைப் போன்று சமைப்பதற்கும்,ஜாம்களாகவும் மற்றும் ஊறுகாய்களாகவும் பயன்படுத்துகிறார்கள்.
பழுக்காத மற்றும் புளிப்பு வகை ஸ்டார் ரூட்டை சமையலுக்கும் புளிப்புச் சுவையை கூட்டவும்,லவங்கத்துடன் சேர்த்தும் பயன்படுகிறது. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உப்புடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.தாய்லாந்தில் இறால் மற்றும் மீன்கள் சமைக்கும் தருணங்களில் பயன்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
இந்த ஸ்டார் ஃப்ரூட்ஸில் இருந்து பெறப்படும் சாறினை கொண்டு, குளிர்பானங்கள் அதிலும், குறிப்பாக, புளிப்புச் சுவையுடைய குளிர்பானங்களை தயாரிக்க, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்றன.
மருத்துவத்தில் சிக்கன் பாக்ஸ் , குடல் ஒட்டுண்ணிகள் , தலைவலி மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் இந்த ஸ்டார் பழம் ஆனது பயன்படுகிறது. மேலும் இந்த பழத்தின் சாற்றையைக் கொண்டு உலோக பாகங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல இந்த பழத்தினை அளவாக உட்கொண்டு இதனில் இருக்கும் பயன்களை பெறலாம் மேலும் மேல் குறிப்பிட்ட சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும்