Convertible Vehicle: அடடேய்ய்..! ஆட்டோக்குள்ள ஸ்கூட்டர், சர்ஜ் எஸ்32 - உலகின் ஃபர்ஸ்ட் கிளாஸ் கன்வெர்டபள் வாகனம்
Surge S32 Two in One Convertible Vehicle: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சர்ஜ் S32 எனப்படும், கன்வெர்டபள் வாகனத்தின் அறிவிப்பு பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Surge S32 Two in One Convertible Vehicle: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில், சர்ஜ் S32 எனப்படும் கன்வெர்டபள் வாகனத்தை அடுத்த ஆண்டில் சந்தைப்படுத்தும் என கூறப்படுகிறது.
ஹீரோ சர்ஜ் S32 மோட்டார்சைக்கிள்:
Hero MotoCorp வழங்கும் Surge S32 எனப்படும் கன்வெர்டபள் வாகனம், அடுத்த ஒரு வருடத்திற்குள் தொடர் உற்பத்தியில் நுழையும் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோ ஆகிய இரண்டு விதமான வாகனங்களை இணைக்கும் இந்த தனித்துவமான வாகனம், இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட L2/L5 பிரிவின் கீழ் பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. நிறுவனம் ஆண்டுக்கு 10,000 யூனிட்கள் என்ற மிதமான உற்பத்தி இலக்கினை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த மாடல் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் சந்தை வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் என்று, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆட்டோவிற்குள் ஸ்கூட்டர்
ECIMA 2024 இன் நிகழ்ச்சியில் பேசிய Hero MotoCorp இன் செயல் தலைவரும் முழு நேர இயக்குநருமான டாக்டர் பவன் முன்ஜால், “உலகம் முழுவதும் மற்றும் இந்தியாவிலேயே முதன்முறையாக, இந்த வாகனங்களை பதிவு செய்ய நாங்கள் இப்போது அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். அவர்களை சாலையில் ஓட்டிச் செல்லுங்கள். இரண்டுக்கும் தனித்தனி பதிவு பலகைகள் இருக்கும். ஆனால் ஸ்கூட்டர் முச்சக்கர வண்டிக்குள் சென்றவுடன், அது ஒன்றாக ஐக்கியமாகி ஒரே வாகனமாக மாறுகிறது. நான் எனது குடும்பத்துடன் வெளியே செல்ல விரும்பும் போது எங்களுக்கு மூன்று சக்கர வாகனம் தேவைப்படுகிறது. எனது தனிப்பட்ட பயணங்களுக்கு இரு சக்கர வாகனம் மட்டுமே தேவைப்படும் போது, ஸ்கூட்டர், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்னிடம் உள்ளது” என தெரிவித்தார்.
வடிவமைப்பு விவரங்கள்:
பதிவு செய்வதற்கான சான்றிதழைப் பெற, S32 க்கு புதிய பதிவு வகையை உருவாக்க, Surge மற்றும் Hero ஆகியவை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்தது. 'L2-5' என அழைக்கப்படும், இது "2-சக்கர வாகனம்-3-சக்கர வாகனத்தின் ஒருங்கிணைந்த வாகனம் என வரையறுக்கப்படுகிறது. இது L2 வகையின் இரு சக்கர வாகனம் சுயமற்ற வாகனத்துடன் இணைக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது. வாகனங்களை தேவைக்கேற்ப பிரிக்கலாம் அல்லது இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ஜ் 32:
சர்ஜ் 32 ஆனது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு முழுமையாகச் சொந்தமான ஸ்டார்ட்அப் நிறுவனமான "சர்ஜ்" ஆல் தயாரிக்கப்பட்டது. Surge 32 ஆனது S32 எனப்படும் மாடுலர் EV இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இது பல்வேறு பயன்பாடுகளுக்கு பல பாடி ஸ்டைல்களை உருவாக்கும். Surge S32 இன் தனித்தன்மை என்னவென்றால், இது இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு இடையே விரைவாகவும் வசதியாகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இது முன் சக்கரம் இல்லாத ஒரு ரிக்ஷாவைக் கொண்டுள்ளது. வாகனத்தில் இ-ஸ்கூட்டரானது, ஸ்லாட்கள் மற்றும் முன் சக்கரமாகவும் செயல்படுகிறது.