Fathers day 2023: இந்த தந்தையர் தினத்தில் அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? அசத்துங்க..
வீட்டிலேயே அவர்களுக்கு பிடித்த உணவை செய்து அப்பாவை ஆச்சரியப்படுத்துங்கள். அவற்றில் இரண்டு உணவு வகையை செய்யும் முறை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
தந்தையர் தினம் நெருங்கிவிட்டது, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 18-ஆம் தேதி எல்லா தந்தைகளையும் கொண்டாடும் சிறப்பான நாள் அமைய உள்ளது.
உலக தந்தையர்கள் அனைவரும், தங்கள் குழந்தைகளை சிறகுக்கு அடியில் வைத்து பார்த்துக்கொள்ளும் பறவைபோல பார்த்துக்கொள்ள, செய்த தியாகங்களை போற்றும் நாள் இது. தந்தைகள் நம் தலையின் மீது இருக்கும் கூரைகளைப் போன்றவர்கள் - அவர்களின் பல தியாகங்கள் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன என்பது பொதுவான கருத்து. ஏனென்றால் அவர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் வாழ்க்கை சமரசங்கள் மூலம் நம் மீதான அன்பை வெளிப்படுத்துகிறார்கள். இவை கடைசி வரை நமக்கு தெரியாமலே கூட போய்விடுகிறது.
நம் வாழ்வில் அப்பாக்கள் இருப்பதையும், அவர்கள் நம் வாழ்க்கையை எப்படி எளிதாகவும், அழகாகவும், சிறப்பாகவும் ஆக்குகிறார்கள் என்பதையும் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18 அன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அவர்களுக்காக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? பொதுவாகவே எல்லா தந்தைகளும் விரும்புவது நல்ல உணவைதான். வீட்டிலேயே அவர்களுக்கு பிடித்த உணவை செய்து அப்பாவை ஆச்சரியப்படுத்துங்கள். அவற்றில் இரண்டு உணவு வகையை செய்யும் முறை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
பனீர் கட்லெட்:
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 4 டீஸ்பூன்
பெருங்காயம் - ½ தேக்கரண்டி
சீரகம் - 1½ டீஸ்பூன்
இஞ்சி (நறுக்கியது) - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 2
பச்சை பட்டாணி - 1 கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) - 1 கப்
பனீர் (நசுக்கியது) - 400 கிராம்/ 2½ கப்
கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு கைப்பிடி
கசூரி மேத்தி இலைகள் - 2 டீஸ்பூன்
ரொட்டி துண்டுகள் - 4
கொண்டைக்கடலை மாவு - ½ கப்
உப்பு - தேவைக்கேற்ற அளவு
பிளாக் சால்ட் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - ½ கப்
எண்ணெய் - வறுப்பதற்கு
கார மிக்சர் - 1 கப்
செய்முறை:
கலவையைத் தயாரிக்க, சிறிது எண்ணெயைச் சூடாக்கி, நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கிளறவும். பச்சை பட்டாணி, உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி, சாட் மசாலா மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும். பின்னர் வேகவைத்த மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். அதை ஆறவிட்டு, நசுக்கப்பட்ட பனீர், கசூரி மேத்தி, உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து ஒன்றாக கலக்கவும். பிரட் தூள்களில் தோய்த்து கலவையை ஒன்றாக இணைக்கவும். பூச்சு செய்ய, கொண்டைக்கடலை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். கட்லெட்டுகளை கலவையில் நனைத்து பிரெட் தூள்களில் தோய்க்கவும். பின்னர் அவற்றை மிதமான வெப்பநிலையில் வறுத்து சூடாக பரிமாறவும்.
(செய்முறை: குணால் கபூர், செஃப்)
ஷாஹி பிர்னி:
தேவையான பொருட்கள்:
பால் - 4 கப்
குங்குமப்பூ இழைகள் - ½ தேக்கரண்டி
குறுகிய தானிய அரிசி (30 நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டியது) - ¼ கப்
பிஸ்தா - 15-20,
பச்சை ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி
உலர்ந்த ரோஜா - 2-3 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் - ½ தேக்கரண்டி
செய்முறை:
நான்ஸ்டிக் கடாயை சூடாக்கி பால், பாதி குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவிடவும். அரிசியை பிஸ்தா, மீதமுள்ள குங்குமப்பூ மற்றும் நான்கில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு அரிசி கலவையை பாலில் சேர்த்து, பச்சை ஏலக்காய் தூள், காய்ந்த ரோஜா இதழ்கள், ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும். சுமார் 10 நிமிடங்கள் மெதுவாக வேக வைக்கவும். கடைசியாக ரோஜா இதழ்கள், பிஸ்தா மற்றும் சில்வர் வார்க் ஆகியவற்றால் அலங்கரித்து பரிமாறவும்.
(செய்முறை: சஞ்சீவ் கபூர், செஃப்)