Diwali Special Recipes : காஜூ கத்லி.. பாசிப்பருப்பு லட்டு..பாதாம் அல்வா.. இந்த தீபாவளிக்கு இந்த ரெசிப்பிகளை செஞ்சு அசத்துங்க..
டயட்டிங் செய்பவர்கள் எல்லாம் அந்த எண்ணத்தை அடியோடு மறந்துவிட்டு இனிப்பு வகைகளில் தங்களை திளைக்கச் செய்துகொள்ளும் காலம் இது
தீப ஒளித் திருநாளான தீபாவளி நெருங்கி விட்டது. அதன் கலாச்சார முக்கியத்துவம் தவிர்த்து, இந்தக் கொண்டாட்டமான நாள் புதிய ஆடைகள், பல வண்ண ரங்கோலிகளுடன் கூடிய வீட்டு அலங்காரம் செய்தல் மற்றும் சுவையான இனிப்புகளை சாப்பிடுவதற்கான நாளாகக் கருதப்படுகிறது.உடல் எடை குறைக்க டயட்டிங் செய்பவர்கள் எல்லாம் அந்த எண்ணத்தை அடியோடு மறந்துவிட்டு இனிப்பு வகைகளில் தங்களை திளைக்கச் செய்துகொள்ளும் காலம் இது. இந்த தீபாவளிக்கு, சில பாரம்பரிய இனிப்பு வகைகளை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாமே நண்பர்களே!
இந்திய இனிப்பு காஜு கட்லி
முந்திரி பருப்பை நன்றாகப் பொடியாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவிடவும்.ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். முந்திரி தூள் சேர்த்து கலந்து மூன்று நிமிடம் வதக்கவும். கலவையைக் குளிர்விக்க விடவும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிச் சிறிது பிசையவும். கலவையை ஒரு பர்ஃபி ட்ரேயில் பரப்பி, சமன் செய்யவும். பிறகு அலங்கரித்துச் சதுரங்களாக வெட்டவும். வெட்டப்பட்ட துண்டுகளைப் பரிமாறவும்.
சுவையான ரவா பாயசம்
கமகம வாசனையுடன் கூடிய சில க்ரீம் சேர்த்து செய்யப்படும் கெட்டியான மற்றும் ருசியான பாயசம் இல்லாமல் தீபாவளி முழுமையடையாது.ரவை அல்லது ரவைக் குருணையை வறுக்கவும். முழு கிரீம் கொண்ட பால் சேர்த்து கொதிக்க விடவும். தொடர்ந்து கிளறிக்கொண்டே சிறிது நேரம் வேக வைக்கவும். சர்க்கரை, உலர் பழங்கள், குங்குமப்பூ மற்றும் பச்சை ஏலக்காய் சேர்த்து, சுமார் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் ஆறவைத்து பரிமாறவும்.
குஜராத்தி உணவு மோகன்தல்
தண்ணீரில் சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை நன்கு கிளறவும். சிறிது நேரம் கொதிக்க விடவும். ஒரு பாத்திரத்தில் கோயாவை அது நன்கு கரையும் வரை சமைக்கவும். நெய்யை சூடாக்கி, பின் கடலைமாவு சேர்த்து நன்கு வதக்கவும்.ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். சர்க்கரை பாகை சேர்த்து மீண்டும் கலக்கவும். நெய் தடவிய பாத்திரத்துக்கு அதை மாற்றி, பாதாம் மற்றும் பிஸ்தாவுடன் அலங்கரித்து பின்னர் அதைச் சதுரங்களாக வெட்டி உண்பதற்குப் பரிமாறவும்.
பண்டிகைகளுக்கான இனிப்பு பாதாம் அல்வா
பாதாமை தண்ணீருடன் ஒரு மென்மையான பேஸ்டாக கலக்கவும். பாதாம் பேஸ்ட்டை அடி கனமான பாத்திரத்தில் கெட்டியாகும் வரை சமைக்கவும்.சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பால் சேர்த்து கிளறவும். தேங்காய் எண்ணெயைச் சேர்த்து, கலவையை கெட்டியாகவும், கட்டியாகவும் இருக்கும் வரை மீண்டும் கிளறவும். பின்னர் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து மீண்டும் கிளறவும். ஒன்றிரண்டு குங்குமப்பூ இழைகளால் அலங்கரித்து, உங்கள் பாதாம் ஹல்வாவை சூடாகப் பரிமாறவும்.
பாசிப்பருப்பு லட்டு
பாசிப்பருப்பை நெய்யில் வறுத்து, தொடர்ந்து கிளறி, பல நிமிடங்கள் கொதிக்கவிடவும். கலவையை ஒரு தட்டில் மாற்றி ஒரு மணி நேரம் ஆறவிடவும். பொடித்த சர்க்கரை, பொடியாக நறுக்கிய பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கூழாகும் வரை கலக்கவும்.கலவையின் ஒரு சிறிய பகுதியை எடுத்து சிறிய உருண்டைகளாக வடிவமைக்கவும். பாதாம் துண்டுகளால் அலங்கரிக்கவும், உங்கள் பாசிப்பருப்பு லட்டுகள் தயார்.