News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Cucumber Corn Salad: ஸ்நாக் சாப்பிடனும் ஆரோக்கியமாகவும் இருக்கனுமா? இதோ சாலட் ரெசிபி!

ஆரோக்கியமான காலை உணவு அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புபவர்களுக்கு வெள்ளரிக்காய் வைத்து செய்யும் சாலட் சிறந்த தேர்வு..

FOLLOW US: 
Share:

 வெள்ளரிக்காய் - ஸ்வீட் கார்ன் சாலட்

என்னென்ன தேவை?

நறுக்கிய வெள்ளரிக்காய் - ஒரு கப்

வேகவைத்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப்

யோகர்ட் - அரை கப் 

சில்லி ஃப்ளேக்ஸ் -  ஒரு டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சீரக தூள் - ஒரு டீ ஸ்பூன்

நன்று வெங்காயம் (விருப்பமெனில் மட்டும்) - ஒன்று

தேன் ஒரு ஸ்பூன் - ஒரு டீ ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய யோகர்ட், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, சீரக தூள், தேன் ஆகியவற்றை நன்றாக கலக்க வேண்டும். இதோடு வெள்ளரிக்காய், வேகவைத்த ஸ்வீட்கார்ன் சேர்த்து விட்டால் சால்ட ரெடி. வெங்காயம் விரும்பி சாப்பிடுபவர்கள் எனில் அதோடு சேர்த்துகொள்ளலாம். இது சிறந்த காலை உணவு.

என்னென்ன தேவை?

வேகவைத்த சோறு - ஒரு கப்

துருவிய வெள்ளரிக்காய் - 1 1/2 கப்

பொடியாக நறுக்கியு கொத்தமல்லி தழை - சிறிதளவு

தாளிக்க

முந்திரி -  10 

வறுத்த வேர்க்கடலை - அரை கப்

காய்ந்த சிகப்பு மிளகாய் - 2

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

கடுகு - அரை டீ ஸ்பூன்

சீரகம் - அரை டீ ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீ ஸ்பூன்

பெருங்காய தூள் - ஒரு டீ ஸ்பூன்

கருவேப்பிலை - சிறதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாய் நன்றாக சூடானது மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். தேவையான அளவு சேர்க்கலாம். இதில் கடுகு, சீரகம், காய்ந்த சிகப்பு மிளகாய், உளுந்து, கருவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும்..இதில் முந்திரி சேர்த்து கொள்ளவும். வேர்க்கடலையும் சேர்க்கலாம். அது நன்றாக பொன்னிறமாக வதங்கியதும் துருவிய வெள்ளரிக்காய், தேங்காய், உப்பு, பெருங்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.  வெள்ளரிக்காய் கொஞ்சம் வதங்கியதும் வேக வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். வெள்ளரிக்காய் ரைஸ் ரெடி. 

வெள்ளரிக்காய் நன்மைகள்

 எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது. எலும்பின் அடத்தி அதிகரிக்கும். 

சரும பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் ஜூஸ் தினமும் குடிக்காலாம்.

வெள்ளரிக்காய் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடை எடை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம். நீர்ச்சத்து மிகுந்து. கோடை காலத்தில் உடலை குளு குளு வைத்துகொள்ள வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.  உடலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும், கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இரத்தத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு உடலுக்கு கொடுக்க கூடியது வெள்ளரிக்காய். 

குறைந்த கலோரி என்பதால் எளிதில் ஜீரணமாகும். செரிமான திறனை மேம்படுத்தும். குடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்கும். 

வெள்ளரிக்காய், கற்றாழை, மோர் ஆகியவற்றை சேர்த்து ஜூஸ் ஆக செய்து குடிக்கலாம். இது சிறந்த டிடாக்ஸ் வாட்டர்.

பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

Published at : 18 Feb 2024 11:47 AM (IST) Tags: @food Food healthy food lifestyle healthy snacks

தொடர்புடைய செய்திகள்

தின்ன தின்ன திகட்டாத திருநெல்வேலி சொதிக்கு ஈடேது மக்களே! வாங்க செஞ்சு அசத்துவோம்..!

தின்ன தின்ன திகட்டாத திருநெல்வேலி சொதிக்கு ஈடேது மக்களே! வாங்க செஞ்சு அசத்துவோம்..!

Tomato Dosa: தோசை பிரியரா? உடுப்பி ஸ்டைல் தக்காளி தோசை - ரெசிபி இதோ!

Tomato Dosa: தோசை பிரியரா? உடுப்பி ஸ்டைல் தக்காளி தோசை - ரெசிபி இதோ!

Paneer Pulao: புரதச் சத்து நிறைந்த பனீர் புலாவ் - ரெசிபி இதோ!

Paneer Pulao: புரதச் சத்து நிறைந்த பனீர் புலாவ் - ரெசிபி இதோ!

Immunity booster Juice:நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Immunity booster Juice:நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Summer Drink: கோடைக்கு ஏற்ற குளுகுளு மாம்பழம், இளநீர் ஜூஸ் ரெசிபி!

Summer Drink: கோடைக்கு ஏற்ற குளுகுளு மாம்பழம், இளநீர் ஜூஸ் ரெசிபி!

டாப் நியூஸ்

Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா

Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா

“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்

“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்

En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!

En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!

Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!

Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!