News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Coconut Dosa Tomato Gravy: சுடச்சுட தேங்காய் தோசை மற்றும் சுவையான தக்காளி குழம்பு - செய்முறை இதோ!

மெது மெது தேங்காய் தோசையும் சுவையான தக்காளி கிரேவியும் எப்படி செய்வது என்று பார்க்கலாம?.

FOLLOW US: 
Share:

1 கப் இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரை கப் துருவிய தேங்காயை இதில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

இதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு கப் சாதம் சேர்த்து 2 நிமிடம் அரைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் 1 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

இந்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 10 முதல் 12 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

தோசை சுடுவதற்கு முன் இந்த மாவில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சிறிதளவு ஆப்ப சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 

இப்போது வழக்கம் போல் தவாவை சூடு செய்து அதில் சற்று தடிமனாக தோசை ஊற்றி மூடி போட்டு ஒரு பக்கம் மற்றும் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். இந்த தோசை பஞ்சு போன்று மெது மெதுவென இருக்கும். 

இப்போது இதனுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற தக்காளி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒன்றரை ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் சிறிது கறிவேப்பிலை மற்றும் இரண்டு கீறிய பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இப்போது பொடியாக நறுக்கிய 6 பெரிய தக்காளியை எண்ணெயில் சேர்க்க வேண்டும். இதில் ஒன்றரை ஸ்பூன் உப்பு மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து 30 நொடிகள் இதை நன்றாக கலந்து விட வேண்டும். 

இதை லேசான தீயில் 3 நிமிடம் மூடி போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் இதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். 

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு நறுக்கிய வெங்காயம் மற்றும் கால் கப் துருவிய தேங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

இதை தாக்காளி குழம்பில் சேர்த்து மிக்ஸி ஜாரை அலசிய சிறிது தண்ணீரையும் அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதை 3லிருந்து 4 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். இப்போது உப்பை சரிபார்த்து விட்டு அடுப்பை அணைத்து விட்டு நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவிக்கொள்ளலாம். 

அவ்வளவுதான் சுவையான தக்காளி குழம்பு தயார். இது நாம் தயார் செய்த தேங்காய் தோசையுடன் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். 

Published at : 03 Mar 2024 02:18 PM (IST) Tags: breakfast recipe coconut dosa tomato gravy soft dosa

தொடர்புடைய செய்திகள்

Tomato Dosa: தோசை பிரியரா? உடுப்பி ஸ்டைல் தக்காளி தோசை - ரெசிபி இதோ!

Tomato Dosa: தோசை பிரியரா? உடுப்பி ஸ்டைல் தக்காளி தோசை - ரெசிபி இதோ!

Paneer Pulao: புரதச் சத்து நிறைந்த பனீர் புலாவ் - ரெசிபி இதோ!

Paneer Pulao: புரதச் சத்து நிறைந்த பனீர் புலாவ் - ரெசிபி இதோ!

Immunity booster Juice:நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Immunity booster Juice:நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Summer Drink: கோடைக்கு ஏற்ற குளுகுளு மாம்பழம், இளநீர் ஜூஸ் ரெசிபி!

Summer Drink: கோடைக்கு ஏற்ற குளுகுளு மாம்பழம், இளநீர் ஜூஸ் ரெசிபி!

Dal Recipe:சப்பாத்திக்கு சூப்பர் காம்போ- பருப்பு மசியல் செய்முறை இதோ!

Dal Recipe:சப்பாத்திக்கு சூப்பர் காம்போ- பருப்பு மசியல் செய்முறை இதோ!

டாப் நியூஸ்

10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Breaking News LIVE: திருமலை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா

Breaking News LIVE: திருமலை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா

The Boy and the Heron Review : தன் கற்பனை கடலில் மூழ்கடிக்கும் மியாசாகி.. The Boy and the Heron பட விமர்சனம்

The Boy and the Heron Review : தன் கற்பனை கடலில் மூழ்கடிக்கும் மியாசாகி.. The Boy and the Heron பட விமர்சனம்

Kingdom of the Planet of the Apes Review: சீசர் பெயரை காப்பாற்றியதா? கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்.. விமர்சனம் இதோ..!

Kingdom of the Planet of the Apes Review: சீசர் பெயரை காப்பாற்றியதா? கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்.. விமர்சனம் இதோ..!