மேலும் அறிய

Kashmir : 70 ஆண்டுகளில் முதல் முறை.. இனிமே காஷ்மீரில் இந்த இடங்களில் சுற்றுலா களைகட்டும்

70 ஆண்டுகளுக்கு பின்னர் காஷ்மீரில் கர்னா, சோன்மார்க் மற்றும் குரேஸ் உள்ளிட்ட பனிப்பொழிவு கொண்ட மலைப்பிரதேச பகுதிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.

இமயமலை சாரல் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது. இமயமலை சாரலில் உள்ள காஷ்மீர் பகுதி குறிப்பாக சுற்றுலா பயணிகளின் பயண திட்டத்தில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும்.

பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படும் காஷ்மீர் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகும். இந்த ஆண்டு காஷ்மீரில் மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மூடப்பட்டிருந்த பல பகுதிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இமயமலையின் பரந்து விரிந்த அழகில் பிரமிக்க வைக்கும் அழகிய பசுமையான இடங்களை இங்கு நாம் காணலாம். காஷ்மீர் என்றாலே வயல்வெளிகளில் பூத்துக் குலுங்கும் மலர்களும், பூந்தோட்டங்களும் ,வெள்ளை நிற பனி மூடிய மலைகளும், அழகிய வெள்ளி நதிகளும் கண்களுக்கு விருந்தாகும். இவற்றின் இயற்கை அழகை ரசிப்பதற்காகவே இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காஷ்மீரை நோக்கி படையெடுக்கின்றனர். அந்த வகையில் காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக பல முக்கியமான இடங்கள் பனிப் பிரதேசங்கள் திறக்கப்பட உள்ளன.
 
சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக காஷ்மீரில் அடர்ந்த பனிப்பொழிவு கொண்ட மலைப்பிரதேச பகுதிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் காஷ்மீர் முழுவதுமே சுற்றிலும் ஒரு அடர்ந்த பனிப் போர்வையின் கீழ் சூழப்பட்டது போலவே காட்சியளிக்கும்.

பொதுவாக கடுமையான குளிர்காலத்தில் காஷ்மீரின் பல பகுதிகளுக்கு பயணம் செய்ய தடை செய்யப்பட்டிருக்கும். காஷ்மீரில் எழுபது ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட மிகவும் பனிப் பொழிவு மிக்க சுற்றுலா தலங்களான கர்னா, சோன்மார்க் மற்றும் குரேஸ் போன்ற சில பிரபலமான அழகிய இடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில்
 தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த குறிப்பிட்ட பகுதிகள் திறக்கப்பட உள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் ,அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விடுமுறையையும் சிறந்த முறையில் அனுபவிக்கும் வகையில் அங்கு  பல சாகச விளையாட்டு  திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. காஷ்மீரின்  குல்மார்க்கில் குளிர்காலத்தை வரவேற்கும் வகையில் பனிச்சறுக்கும் மேலும் புதிதாக திறக்கப்பட உள்ள பகுதிகளில் சாகச விளையாட்டுக்களும், 
ஸ்னோ‌ போர்டிங் போன்றவையும் உருவாக்கப்பட உள்ளன.

மேலும் புதிதாக திறக்கப்பட உள்ள கர்னா, சோன்மார்க் மற்றும் குரேஸ் உள்ளிட்ட காஷ்மீரின் மலைப்பிரதேசங்களில்  பனி படர்ந்த இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவைகளை தொடங்குவது குறித்தும் சுற்றுலாத்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கோடை காலங்களில் தான் இந்த இடங்களை பார்வையிட விரும்புவர். ஆனால் ஆண்டு தோறும் ஜம்மு மற்றும் காஷ்மீரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்லக் கூடிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையிலும் அதேபோல் அங்குள்ள மக்களின் தொழில் துறையை விருத்தி செய்யும் நோக்கத்துடனும் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் இந்த சுற்றுலாத்துறை நம்பித்தான் உள்ளது.

காஷ்மீரின் குல்மார்க் நகரம் குளிர்காலத்தில் எப்போதும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இடமாக இருக்கிறது. 
அதேபோல் மத்திய காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள தூத்பத்ரி சுற்றுலா பட்டியலில் அண்மையில் இணைக்கப்பட்ட இடமாகும். குல்மார்க் மற்றும் தூத்பத்ரி ஆகிய இடங்களுக்கு  சாலை வழியாக பயணிக்கலாம். பனியால் மூடப்படாத குரேஸ் பகுதியை பார்க்க விரும்புவோர் ஜூன் முதல் செப்டம்பர் வரை  பயணங்களைத் திட்டமிடலாம். கிரேட்டர் இமயமலை வழியாக‌ சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை அடையலாம்.

குரேஸ் செல்வோர் காஷ்மீரின் பழமையான பழங்குடியினரின் ஒரு பிரிவான ஷைனா மொழி பேசும் டார்ட்களின் கலாச்சாரத்தை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை பெறலாம். அஸ்டோர், கில்கிட் மற்றும் சிலாஸ் ஆகிய இடங்களில் இருந்து கட்டுப்பாட்டுக் கோட்டால் துண்டிக்கப்பட்ட பகுதிதான் 
குரேஸ் ஆகும். கிஷங்கங்கா பள்ளத்தாக்கில் மலையேற்றம், முகாம் (கேம்ப்) மற்றும் மீன்பிடித்தல் என பல அழகிய பகுதிகளைக் கொண்ட  ஒரு சாகச சுற்றுலாத் தலமாக குரேஸ் திகழ்கிறது.

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Embed widget