Fashion Mistakes: சரக்கு போதை மட்டும் தான் ஆபத்தா..! ஃபேஷன் பழக்கங்களால் தினசரி இவ்வளவு பிரச்னையா?
Fashion Mistakes: உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய ஃபேஷன் தொடர்பான பழக்க வழக்கங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Fashion Mistakes: உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய ஃபேஷன் தொடர்பான பழக்க வழக்கங்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஃபேஷன் பழக்க வழக்கங்கள்:
நீங்கள் ஆடைகள் மற்றும் காலணிகளை வாங்கும்போது, உங்களுக்கான ஃபேஷன் தேர்வுகளை மட்டும் செய்யவில்லை. உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் முடிவுகளையும் எடுக்கிறீர்கள். நீங்கள் என்ன உடுத்துகிறீர்கள் மற்றும் உங்களை எப்படி வெளிக்காட்டி கொள்கிறீர் என்பது உங்கள் பாணியில் ஆர்வத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்ல. இந்த வெளித்தோற்றத்திற்கான சிறிய தேர்வுகளும் காலப்போக்கில் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, ஒரு தோளில் சுமந்தபடி கனமான கைப்பையை எடுத்துச் செல்வது உங்கள் நரம்புகளை எவ்வாறு சேதப்படுத்துவது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதேபோன்று, ஃபேஷனுக்காக தினசரி நாம் பயன்படுத்தும் பொருட்கள், ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய தவறான ஃபேஷன் பழக்க வழக்கங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தவறான பழக்க வழக்கங்கள்:
1. ஹீல்ஸ்
ஹை ஹீல்ஸ் அணிவது ஒரு சிறந்த யோசனை அல்ல என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். இது கீழ் முதுகு வலி, கழுத்து வலி, முழங்கால் வலி போன்ற நீண்ட கால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் முதுகு தண்டையுய்ம் பாதிக்கலாம். பெண்கள், குறிப்பாக முப்பது வயதிற்குட்பட்டவர்கள் அல்லது மாதவிடாய் அல்லது பெரிமெனோபாஸ் காலத்தில் செல்பவர்கள், ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும். காரணம் அந்த நேரத்தில் அவர்கள் எலும்பு அடர்த்தியில் மாற்றங்களை அனுபவிப்பார்கள். ஹை ஹீல்ஸ் எவ்வளவு ஸ்டைலாக இருந்தாலும், அதை மிகவும் குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்த முயலுங்கள்.
2. கனமான பைகள்
நமது அடிப்படைக்கான அனைத்து பொருட்களையும் ஒற்றை பைகளில் அடைக்க முயல்கிறோம். ஆனால், அதிக எடையுடன் ஒரு பையை தூக்குவது தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்தில் நீண்டகால மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக எடை கொண்ட பைகள் தோள்கள், கழுத்து மற்றும் முதுகெலும்பு போன்ற உடல் பாகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, இது தசை சமநிலையின்மை, மோசமான தோரணை மற்றும் நாள்பட்ட வலிக்கு வழிவகுக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். முன்கையில் ஒரு பையை எடுத்துச் செல்வது முழங்கை மற்றும் மணிக்கட்டில் அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது மூட்டு வீக்கம் அல்லது நரம்பு சுருக்கத்தை ஏற்படுத்தும். எனவே, பையில் அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்வதைக் கருத்தில் கொள்ளுங்கள், ஒரே பக்கத்தில் பையை மாட்டிச் செல்வதை தவிருங்கள்.
3. இறுக்கமான ஆடை
பெட்டிகோட் புற்றுநோய் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இது உள்பாவாடை அல்லது வேட்டியை மிகவும் இறுக்கமாக கட்டுவதுடன் இடுப்பில் ஏற்படும் அழற்சியுடன் தொடர்புடையது. இறுக்கமான ஆடைகளை, குறிப்பாக இடுப்பைச் சுற்றி, திரும்பத் திரும்ப அணிந்தால் மட்டுமே இது நிகழ்கிறது. இறுக்கமான ஆடைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பல உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க, இறுக்கமான ஒல்லியான ஜீன்ஸ் மற்றும் கோர்செட் போன்ற ஆடைகளை அணிவதை தவிர்க்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இறுக்கமான ஆடைகள் ரத்த ஓட்ட தடை, அஜீரணக் கோளாறு, சுவாசக் கோளாறு மற்றும் தொற்றுநோய் பிரச்னைகளை ஏற்படுத்த வல்லதாகும்.
4. பொருத்தமற்ற மற்றும் செயற்கை உள்ளாடைகள்
உள்ளாடைகளைப் பொறுத்தவரை, துணி மற்றும் பொருத்தம் குறிப்பிடத்தக்க விஷயம். செயற்கை மற்றும் சுவாசிக்க முடியாத ஆடைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ஈரப்பதத்தை பிடித்து தோல் எரிச்சல், பூஞ்சை தொற்று அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். பொருத்தமற்ற உள்ளாடைகள் தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதிகளை கஷ்டப்படுத்துகின்றன.
5. பராமரிப்பற்ற காண்டாக்ட் லென்ஸ்கள்:
லென்ஸ்கள் நமது கண்ணிற்கான அழகை மேம்படுத்தி சுற்றி இருப்பவர்களின் கவனத்தை ஈர்க்க உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், அதனை முறையாக பராமரிக்கவில்லை அல்லது அடிப்படை லென்ஸ் அணியும் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால், அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். அதிக நேரம் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவது, சரியாக சுத்தம் செய்யாதது, அல்லது லென்ஸ்கள் போட்டு குளிப்பது போன்றவற்றால் கண் தொற்று, வறட்சி மற்றும் கருவிழியில் பாதிப்பு கூட ஏற்படலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

