Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவு நேர மன உளைச்சலுக்கான உண்மையான காரணங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Nighttime Anxiety: இரவு நேர மன உளைச்சலை தடுப்பது, தவிர்ப்பதற்கான காரணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
இரவுநேர மன உளைச்சல்:
ஒரு நல்ல இரவு தூக்கத்தின் மூலம்தான் நமது உடலுக்கும், மனதிற்குமான முழு ஓய்வு கிடைக்கும். ஆனால், இரவில் சரியாகத் தூங்காதவர்கள் பலவிதமான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். அது நீண்ட நாள் நீடித்தால் உடல் நலத்துக்குக் கேடாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே, தூக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால், அது அனைவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. அந்த வகையில், இரவில் தூக்கத்தைக் கெடுக்கும் காரணிகளில் கவலையும் ஒன்று. இரவு நேர கவலை தூக்கத்தை கடுமையாக பாதிக்கும். எந்த ஒரு சிறிய பிரச்னையிலும் கவனம் செலுத்த முடியாமல் போவதாலும், கார்டிசோல் போன்ற மன அழுத்தம் மற்றும் கவலை ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதாலும் கவலை ஏற்படுகிறது. குறிப்பாக இரவில் ஏன் கவலை அதிகரிக்கிறது? அறிகுறிகள் என்ன? அதை கையாளவது எப்படி? போன்றவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
கவனம் செலுத்த இயலாமை
சில நேரங்களில் சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தக்கூடாது. அதாவது தேவையில்லாத விஷயங்களை அதிகம் மனதில் போட்டுக்கொண்டு சிந்திக்க வேண்டாம். இல்லையெனில் அவை கவலையை ஏற்படுத்தும். நாள் முழுவதும் வேலையில் அழுத்தமாக இருக்கும் போது, நாள் பல்வேறு சங்கடமான விளைவுகளுக்கு இடையே கடந்து செல்கிறது. இரவில் காணப்படும் தனிமை பல்வேறு பிரச்னைகளை மனதில் கொண்டு வருகிறது. அந்த நேரத்தில் இந்த பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப தவறினால் கவலை ஏற்படும். இந்தக் கவலையால் தூக்கம் என்பதே உங்களுக்கு தூரமாகலாம்.
கார்டிசோல்:
மன அழுத்தம் உடலில் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவை அதிகரிக்கிறது. இப்படி கார்டிசோல் அதிகரித்தால், மன அழுத்தம் அதிகமாகி, கவலையாக மாறுகிறது. எண்ணங்கள் அதிகமாகும் போது கார்டிசோலின் அளவு அதிகரிக்கும். இரவின் தனிமையில் கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வருவதாலும், தேவையற்ற குற்ற உணர்வுகளாலும் எண்ணங்கள் உக்கிரமடைகின்றன. இது கவலைக்கு ஒரு முக்கியமான காரணம். கவலை மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது.
கவலையின் விளைவுகள்
பதற்றம் தொடங்கும் போது, இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. மெதுவாக தசை இறுக்கும் உணர்வு உணரப்படுகிறது. சுவாசிப்பதில் சிரமம் போன்ற உணர்வு ஏற்படும். நெற்றியிலும் உள்ளங்கையிலும் வியர்வை வழியும். இத்தகைய அறிகுறிகள் இரவில் தனிமையில் தோன்றினால், மேலும் பதற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எவ்வளவு யோசித்தாலும் வாழ்க்கையின் சில அம்சங்களை மாற்ற முடியாது என்ற புரிதல் இல்லாத போது, அது மிகை சிந்தனையை ஏற்படுத்துகிறது. அதிகமாகச் சிந்திப்பது கவலையின் முதல் படி. எதிர்காலத்தைப் பற்றிய கவலை என்பது தவறாக மாறலாம். கவலையில் இருக்கும் போது பணியில் கவனம் செலுத்த முடியாது. கடுமையான அமைதியின்மை துன்புறுத்த தொடங்கும்.
கவலைக்கான காரணங்கள்
- நாள் முழுவதும் அழுத்தத்தில் வேலை செய்வது இரவில் கவலையை அதிகரிக்கும்.
- சிலரின் ஹார்மோன்கள் இரவில் வித்தியாசமாக செயல்படுகின்றன. சிலருக்கு பகலில் சுறுசுறுப்பாக செயல்படும் ஹார்மோன்கள் இரவிலும் அதிகமாக இருப்பதால் கவலை ஏற்படுகிறது.
- நீண்ட நாட்களாக நல்ல தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் கவலை ஏற்படும் அபாயம் உள்ளது.
- இரவில் காஃபின், ஆல்கஹால் மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வது தூக்கத்தை சீர்குலைத்து கவலையை ஏற்படுத்தும்.
- ரத்த சோகை, தைராய்டு மற்றும் பிற நோய்களும் இரவுநேர கவலையை ஏற்படுத்தும்.
- இரவுநேர கவலை பெரும்பாலும் கடுமையான உளவியல் பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
- அடுத்த நாள் ஏதேனும் முக்கியமான நிகழ்வுகள் வரும்போது கவலை ஏற்படலாம்.
தவிர்க்க செய்ய வேண்டியது என்ன?
- தூங்கும் இடம் அல்லது படுக்கையை மாற்றலாம்
- உங்கள் மனதை குழப்பமான எண்ணங்களிலிருந்து திசைதிருப்ப தூங்கச் செல்லும் முன் எதையாவது படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
- தூங்குவதற்கு முன் 10 நிமிடம் தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும்
- இனிமையான இசையைக் கேளுங்கள் மன அமைதியை தரலாம்
- மூச்சைக் கவனிப்பது மற்றும் இதயத் துடிப்பைக் கேட்பது போன்ற நமது உடலுடனான தொடர்பை அதிகரிக்கும் செயல்பாடுகளும் சிறந்த தூக்கத்தைத் தூண்டும்
(பொறுப்பு துறப்பு: மனசிக்கல்களுக்கு உரிய மருத்துவ வல்லுநர்களை அணுகி ஆலோசனைகளை பெறுவதே நல்லது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் என்பது, பல்வேறு வல்லுநர்கள் பல்வேறு வித்தியாசமான சூழல்களில் வழங்கிய ஆலோசனைகளின் தொகுப்பு மட்டுமே ஆகும். )