மேலும் அறிய

Cucumber Benefits :சரும பளபளப்பு.. உடல் ஆரோக்கியம்.. வெள்ளரிக்காயின் பயன்கள் என்ன?

வெள்ளரிக்காயின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மிக்கது. வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது. 

வெள்ளரிக்காய் எளிதாக கிடைக்கும் காய்கறி. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.  உடலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும், கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இரத்தத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு உடலுக்கு கொடுக்க கூடியது வெள்ளரிக்காய். 

தொப்பையை குறைக்க பல்வேறு வழிமுறைகளை முயற்சித்தவர்கள், தொப்பை குறைய தினமும் வெள்ளரிக்காய் சேர்ந்த நீர் குடிப்பதன் மூலம் பலன் பெறலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளரிக்காய் ஒரு நல்ல நிவாரணி. வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது. 

வெள்ளரிக்காய் அழகு தயாரிப்பில் முக்கியமானது. வெள்ளரிக்காயை மசித்து கூழாக்கி ஃபேஸ் பேக் தயாரிக்கப்படுகிறது. இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கிறது. முகம், கண்கள் மற்றும் கழுத்துப்பகுதியில் வெள்ளரிக்காய் மசித்த விழுதை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் சருமத்துக்கு சிறந்த ஊட்டம் கிடைக்கும். வெள்ளரிக்காய் பேசியல் சருமத்துக்கு மிகவும் நல்லது. இது பருக்கள், வெயிலால் ஏற்பட்ட கருமையை சரி செய்கிறது.  மற்றும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கிறது.

வெள்ளரிக்காயை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் சரியாகும். இது பாக்டீரியாவிலிருந்து விடுபட உதவும். வெள்ளரிக்காய், பீட்ரூட் மற்றும் செலரி சாறு யூரிக் அமிலத்தின் சேர்க்கையை குறைக்கிறது. இது கீல்வாதம் மற்றும் பிற கோளாறுகளுக்கு சிறந்த பலனை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

வெள்ளரிக்காய் எளிதான மென்மையான உணவு. இது எளிதில் ஜீரணிக்க கூடியது. மேலும் செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க செய்கிறது. வெள்ளரி சாறு இரைப்பை மற்றும் குடல் புண்கள், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
2026 Fathers Day: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!
2026 Fathers Day: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!
Children Height Growth: உயரம் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.. மருத்துவர்கள் சொல்லும் தீர்வு என்ன?
Children Height Growth: உயரம் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.. மருத்துவர்கள் சொல்லும் தீர்வு என்ன?
இலவச அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!
இலவச அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
TN Weather Alert : தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
Embed widget