”உங்கூட நான் சேர்ந்து இருந்திட... ” : காதல் எவர்க்ரீனாக இருக்க நிபுணரின் சில டிப்ஸ்
உறவுகள், ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளுக்குப் பிறகு இரண்டு நபர்களின் பயணமாக மாறி, ஒன்றாகவும் தனித்தனியாகவும் வளரக்கூடிய இடத்தைக் கண்டறிகிறது
உறவுகள் பல ஏற்ற இறக்கங்களை சந்திக்கின்றன. பரஸ்பர மரியாதை, கண்ணியம் மற்றும் மிக முக்கியமாக அன்பின் அடிப்படையில் சக மனிதருடன் நாம் காதல் வயப்படும்போது, அதைக் கொண்டாட்டமாக வைத்திருக்க சமரசங்கள் தேவையாக இருக்கிறது. உறவில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நாம் அடிக்கடி உணர்கிறோம், விட்டுக்கொடுக்க நினைக்கிறோம் - இருப்பினும், ஒரு உறவு செழித்து உன்னதமான நாட்களைக் காண இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும். உறவுகள், ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளுக்குப் பிறகு இரண்டு நபர்களின் பயணமாக மாறி, ஒன்றாகவும் தனித்தனியாகவும் வளரக்கூடிய இடத்தைக் கண்டறிகிறது. உங்களைப் பட்டவர்த்தனமாக உங்கள் பார்ட்னரிடம் ஒப்படைக்கும்போது அவரும் உங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியம். திருமணம் மற்றும் குடும்ப நல ஆலோசகர் எலிசபெத் எர்ன்ஷா, தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் இடுகையில் இந்த சிக்கல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
திறன்: உறவுகளில் மாற்றம் மற்றும் வளர்ச்சியைத் தொடங்க, முதல் மற்றும் முக்கிய விஷயம் என்னவென்றால், மாற்றத்தை ஒன்றாகச் சந்திக்கும் திறனைக் கொண்டிருப்பது.
உணர்ச்சிகள்: ஒரு உறவில் வளர்ச்சி என்பது பலமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அந்தச் சமயங்களில், பெரும்பாலும் நாம் நம்முடைய சொந்த உணர்ச்சிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால் நம் பார்ட்னரின் உணர்ச்சிகள் நமக்குச் சுமையாக இல்லை என்பதை அறிவதும் முக்கியம். நம் பார்ட்னர் அவருடைய உணர்ச்சிகளைக் கையாளத் தெரிந்தவர் என்பது நமக்கு ஒருவித நம்பிக்கையைக் கொடுக்கும்.
கொண்டாட்டம்: உறவுகள் பெரிய சந்தோஷங்கள் மற்றும் சிறிய துக்கங்கள், சிறிய வெற்றிகள் மற்றும் தோல்விகளை கடந்து உருவாகின்றன. ஒருவரையொருவர் கொண்டாடுவதும், நம் வாழ்வில் அவர்கள் இருப்பதைப் பாராட்டுவதும், அவர்கள் நமக்கான சிறந்த நபராகவும் இருக்க வேண்டும் என்று பார்ட்னர்கள் எப்போதுமே விரும்புவார்கள்.
சமம்: உறவில் சமத்துவம் அதனை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் உறவில் நாம் சமமானவர்கள் என்பதை அறிவது, வளர்ச்சியைத் தொடங்குவதற்கு நம்மைத் தூண்டும்.