Bad Cholesterol :கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்குதா? இந்த உணவுகள்தான் பெஸ்ட்..
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதற்கான சில டிப்ஸ்களை கீழே காணலாம்.
உடல் பருமன்
பொதுவாக இந்தியர்கள் சராசரியான உடல்வாகு கொண்டவர்கள் ஆனால் கடந்த 20 வருடங்களாக இந்த நிலை மாறிக் கொண்டிருக்கிறது. உடல் பருமன் மரபு ரீதியாக வருவது ஒருபுறம் என்றால் பசி இல்லாமல் உண்பது, உண்ட உணவுக்கு ஏற்ற அளவு வேலை செய்யாமல் இருப்பது, தவறான உணவுகளை உண்பது என பல வகைகளிலும் இன்று மனித குலத்திற்கு பெரும் சவாலாக இருக்கிறது.
இது மட்டுமல்லாது போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது சமச்சீர் உணவுகள் இல்லாமல் நிறைய நொறுக்கு தீனிகளை தின்பது என்று நிறைய காரணங்களை கூறிக் கொண்டே போகலாம். இந்த உடல் பருமனால் சுறுசுறுப்பு இல்லாமல் ஒரு விதமான சோம்பல்,உடலில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பின் காரணமாக மாரடைப்பு மற்றும் எந்த வேலையை செய்தாலும்,உடனடியாக மூச்சுளைப்பு மற்றும் சோர்வு என இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்.
இன்று 20 வயதிற்குட்பட்ட இருபாலரும் அதிகளவில் இந்த உடல் பருமன் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் இதற்கு ஆக முக்கிய காரணம் அவர்களுடைய தவறான உணவு பழக்க வழக்கங்களும் மற்றும் உடற்பயிற்சி இன்மை ஆகும். அதிலும் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை குறைப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது.
கெட்ட கொழுப்புகள்
அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும் உணவு மூலம் கெட்ட கொழுப்புகள் நம் உடலில் வருகிறது. அதனால் உடல் எடை அதிகமாகுகிறது. கெட்ட கொழுப்புகளை அகற்ற உடற்பயிற்சி செய்தாலே சிறந்ததாக இருக்கும். ஆனால் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், குறிப்பிட்ட சில உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டாலே கெட்ட கொழுப்புகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
எந்த உணவுகளை பயன்படுத்தலாம்?
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்ற உடற்பயிற்சியை சிறந்த ஒன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இன்றைய காலத்தில் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் பலரும் இருக்கின்றனர். அதனால் சில உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் கெட்ட கொழுப்புகள் கரையும் என்று ம் கூறப்படுகிறது. அதன்படி,
- பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளை தினமும் சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் ஒமேகா 3 அமிலங்கள் உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.
- நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது என கூறப்படுகிறது. அதன்படி, பீன்ஸ், கேரட், ஆப்பிள், கொய்யாபழம் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- குறிப்பாக, தானிய வகையான கொள்ளுவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதன்படி, கொள்ளு சட்டி மற்றும் துவையளாக அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும் என்று கூறப்படுகிறது.