Are Your Spices Pure:மசாலா பொருட்களில் கலப்படம் - கண்டுபிடிக்க எளிதான சில டிப்ஸ்?
Are Your Spices Pure: மசாலா பொருட்களில் உள்ள கலப்படத்தை கண்டறிவதற்கான சில டிப்ஸ்..
சமையலில் மசாலாப் பொருட்கள் என்பது இன்றியமையாதது. சமீபத்தில், இந்தியாவின் எம்.டி.ஹெச். மற்றும் எவரேஸ்ட் ஆகிய நிறுவனங்களின் மசாலாப் பொருட்களில் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எத்திலீன் ஆக்ஸைடு என்ற பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டிருப்பதால் சிங்கபூர், ஹாங்-காங் ஆகிய நகரங்களில் தடை செய்யப்பட்ட செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதுவும் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா வகைகள் ஆரோக்கியமானதா என்பது குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மசாலாப் பொருட்கள் கலப்படம் இல்லாததா, தூய்மையானவற்றை பயன்படுத்துகிறோமோ உள்ளிட்ட பல கேள்விகள் எழும். ஏனெனில், மசாலா வகைகளில் அதன் திடம், நிறம் உள்ளிட்டவற்றை அதிகரிக்க பல்வேறு பொருட்கள் கலக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மாவு, உணவுகளில் கலக்கப்படும் நிறமிகள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இவற்றில் கலக்கப்படும் ரசாயன கலவை உடல்நலனுக்கு ஆபத்தானதாக மாறிவிடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மசாலா பொருட்களில் கலப்படம் ஏற்பட்டால் அதனை எப்படி கண்டறிவது என்பது குறித்து அறிவோம். அவற்றின் தரம் அறிய இதோ சில டிப்ஸ்:
மிளகாய் தூள்:
உணவின் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் தூள். இதன் நிறம் அடந்த சிகப்பு நிறத்தில் இருந்தால் அது தரமானது இல்லை. மிளகாய் பொடியின் டெக்ஸரும் மிகவும் முக்கியம். இதில் மரத் தூள், செங்கல் தூள் கலக்கின்றனர். உண்மையான தரமான மிளகாய் பொடியா என்பதை கண்டறிய உங்களுக்கு தேவையானது தண்ணீரும் க்ளாஸ் ஆஃப் தண்ணீர்.ஒரு க்ளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூளை கலக்க வேண்டும். 5 நிமிடங்கள் காத்திருங்கள். தண்ணீருக்கு அடியில் சிவப்பாக ஏதேனும் தங்கியிருந்தால் அது நிச்சயமாக கலப்படம் செய்யப்பட்டது.
மஞ்சள் தூள்:
மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்காமல் இந்திய சமையலை காண முடியாது. மஞ்சள் உணவுக்கு வண்ணத்தை சேர்ப்பதோடு கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. மஞ்சள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சளி தொல்லை சூடான மஞ்சளில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, மிளகு தூள் சேர்த்து அருந்தலாம். மஞ்சளில், மெட்டானில்(Metanil) யெல்லோ என்ற ஒரு வேதிப் பொருள் கலகப்படுகிறது.
மஞ்சள் தூள் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறாதா என்பதை கண்டறிய ஒரு டம்பளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை போடவும். அப்படியே விட்டுவிடுங்கள். 10 நிமிடங்கள் காத்திருக்கும். மஞ்சள் தூள் கீழே சென்றுவிடும். தண்ணீர் கலங்காமல் இருக்கும். இதுதான் கலப்படம் இல்லாத மஞ்சள்.
சீரகம்
சந்தையில் கிடைக்கும் மசாலா பொருட்கள் எல்லாம் கலப்படம் இல்லாதது என்று சொல்லிவிட முடியாது. சீரகம் கலப்படம் இல்லாதது என்று கண்டுபிடிக்க ஒரு டம்பளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து சீரகம் கீழே தங்கினால் அது ஒரிஜினல் சீரகம். ஏதேனும் கலப்படம் செய்திருந்தால் அது தண்ணீரில் மிதக்கும்.
மிளகு
மிளகு ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. கரு மிளகுடன் பப்பாளி விதை கலக்கப்படுகிறது. ஒரு டம்பளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து சில நிமிடங்கள் காத்திருங்கள். தண்ணீரின் கீழே தங்கும் மிளகும் தரமானது. மேலே மிதப்பவை கலப்படம் செய்யப்பட்டவை.
ஏலக்காய்
நறுமனம் மட்டுமல்ல ஏலக்காய் நிறைய மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. சந்தையில் இதன் விலை அதிகமானதும் கூட. இதிலும் பயன்படுத்த ஏலக்காய கலப்படம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. ஏலக்காய் வாங்கும்போது பார்த்து கவனமாக வாங்கவும். ஏலக்காய் உடைந்திருந்தால் அதை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பட்டை
லவங்கப் பட்டையில் கொய்யா மரப் பட்டையைச் சேர்ந்து கலப்படம் செய்கின்றனர். இதில் அசலை கண்டுபிடிக்க நீங்கள் அதை உங்கள் உள்ளங்கையில் தேய்க்க வேண்டும். உள்ளங்கையில் தேய்க்கும்போது சிவப்பு, பழுப்பு நிற கறை படிந்தால் அது அசலான லவங்கப் பட்டை. போலியான லவங்கத்தில் நிறமே வராது.
மல்லித் தூள்:
மல்லியும் வருடம் முழுவதும் கிடைக்கும் ஒரு மசாலா பொருள். நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது. உணவை தரம் பிரிக்கும் அமைப்பு ஊட்டச்சத்து வளமையாக உள்ள பொருளாக மல்லியை அறிவித்துள்ளது. ஐரோப்பியாவில் பல இடங்களில் இதனை "ஆன்டி-டயபெடிக்" செடி என்று கூட அழைக்கின்றனர். மல்லித்தூளில் மரத் தூளை கூட கலப்படம் செய்கின்றனர். மல்லியை முகர்ந்து பார்த்தே அதன் தரத்தை அறிந்து கொள்ளலாம்.
பெருஙாகய தூள்
Asafoetida அல்லது Hing என்று அழைக்கப்படும் பெருங்கயா தூளில் சோப்புக் கல் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. சோப்புக் கல் தூள் சேர்க்கப்படுவதை தண்ணீரில் ஒரு ஸ்பூன் பெருங்காய தூள் கலப்பதை வைத்து கண்டறியலாம்.
கிராம்பு
கிராம்பில் உள்ள கலப்படத்தை கண்டறிய ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிராம்பை சேர்க்கவும். இப்போது தரமான கிராம்பு தண்ணீரில் மூழ்கிவிடும். கலப்படம் செய்யப்பட்டவை மேலே மிதக்கும்.
இந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் 1954ம் ஆண்டு அமலாக்கப்பட்டது. இதினுள்ள பிரிவு 12ன் படி நுகர்வோர், கலப்படம் உள்ளது என சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து வெளிப்படையாகவே ஆய்வகத்திற்கு அனுப்பலாம். குறைந்தது இரு நபர்கள் சாட்சியம் வேண்டும். இச்சத்திலுள்ள பிரிவு 20ன் படி நுகர்வோர் வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலப்படம் நிரூபிக்கப்பட்டால் நுகர்வோர் அனுப்பும் மாதிரிக்கான கட்டணத் தொகை ரூ.50ஐ திரும்பப் பெறும் வசதி உள்ளது. மேலும் குற்றவாளிக்கு ஆறுமாதம் சிறை முதல் ஆயுள் தண்டனை வரையிலும் ரூ.1000 - 5000 வரை அபராதமும் விதிக்கப்படும்.