எல்லா வகை சருமத்துக்கும் இது சூப்பர் டிப்ஸ்! மாயம் செய்யும் 'மருலா' எண்ணெய்!!
ஒரு நபரை பார்த்தவுடன் தெரிவது அவர் முகம் தானே. அந்த முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்.
மேக்கப் பிடிக்காதவர்கள் இருக்கலாம் ஆனால் முகத்தை சுத்தமாக பொலிவுடன் வைத்திருக்கப் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன?
அப்படி பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது மருலா எண்ணெய். கடந்த 10 ஆண்டுகளாகத் தான் இந்த மருலா எண்ணெய் பிரபலமாக இருக்கிறது என்றாலும் கூட இதனை பெருமையாகப் பேசுவதில் நியாயம் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மருலா எண்ணெய் மிகவும் மிருதுவானது. இதில் ஓலிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது சருமத்தில் நன்றாக ஊடுருவும் தன்மை கொண்டதும் கூட. வாருங்கள் மருலா எண்ணெய்யின் நன்மைகளைப் பார்ப்போம்.
மருலா மரமும் மகிமையும்:
தென் ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள மரம் தான் மருலா மரம். இந்த மரத்தை ஆப்பிரிக்க பூர்வக்குடிகள் இனவிருத்தியின் அடையாளமாக வணங்குகின்றனர். இதில் உள்ள ஓமேகா 9 எண்ணெய் நமது சருமத்தால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒமேகா 9 எண்ணெய்யை ஒத்தது.
மருலா எண்ணெய்யின் நன்மைகள்
மருலா எண்ணெய்யில் மாய்ஸ்சரைஸிங் தன்மை அதாவது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை பராமரிக்கும் தன்மை நிறைவாக உள்ளது. இது சருமத்திற்கு பளிங்கு போன்ற பளபளப்பைத் தரும்.
ஆன்ட்டி ஏஜிங் தன்மை கொண்டது:
மருலா எண்ணெய் ஆன்ட்டி ஏஜிங் தன்மை கொண்டது. இதில் உள்ள லகுவான மாய்ஸ்சரைஸர் வறண்ட சருமத்தில் நன்கு வேலை செய்யக்கூடியது. இது ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பன்புகள் கொண்டது. இதனால் சருமத்திற்கு வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை எளிதில் சமாளிக்க முடியும். அதனால் சருமம் விரைவில் வயதான தோற்றத்தைப் பெறுவதை மருலா எண்ணெய் தள்ளிப்போடுகிறது. மேலும் செதில் செதிலாக இருக்கும் சருமத்தைக் கூட மருலா எண்ணெய் சீராக்குகிறது. சுருக்கங்களை தடுக்கிறது.
சூரிய தாக்குதலில் இருந்து காக்கும்
மருலா எண்ணெய்யில் எபிகாடெச்சின், வைட்டமின் சி போன்ற ஃபைடோகெமிக்கல்ஸ் இருக்கின்றன. மேலும் வைட்டமின் சி மற்றும் இ உள்ளன. இது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்ஸில் இருந்து காக்கிறது. யுவி எக்ஸ்போஸர், மாசு, ஏஜிங், சன் ஸ்பாட்ஸ் பிரச்சினைகளில் இருந்து சருமத்தைக் காக்கிறது.
சீபம் பேலன்ஸ்
சருமத்தில் உள்ள செபாசியஸ் சுரப்பிகள் (sebaceous glands) அதிகப்படியான சீபத்தை (sebum)உருவாக்கும் போது எண்ணெய் சருமம் அதாவது ஆய்லி ஸ்கின் (oily skin) ஏற்படுகிறது. sebum என்பது உடலின் செபாசியஸ் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் அல்லது மெழுகு போன்ற பொருள். சீபத்தில் ஃபேட்டி அமிலங்கள், கார்போஹைட்ரேட்ஸ், வேக்சஸ், ஆர்கானிங் அமிலங்கள் உள்ளன. இவை சருமத்தில் இருந்து தண்ணீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த சீபம் சமநிலையை மருலா எண்ணெய் உறுதி செய்யும்.
இத்தனை நன்மைகள் நிறைந்த மருலா எண்ணெய்யை தற்போது ஸ்கின் கேர் மருத்துவர்களே கூட பரிந்துரைக்கின்றனர்.