Jobs Alert: 10-வது, டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவரா? இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்
Jobs Alert: பத்தாவது தேர்ச்சி பெற்று டைப் ரைட்டிங் தெரிந்தவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
வேலூர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
உதவியாளர்
கணினி இயக்குபவர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DCA, PGDCA, சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கணினி இயக்கத்தில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக 11,916 வழங்கப்படும். இந்தப் பணி தொகுப்பூதியம் அடிப்படையிலானது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://Vellore.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணா சாலை (சுற்றுலா மாளிகை எதிரில்)
வேலூர் - 632 011
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.10.2023
*****
திருப்பதியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
- துணை நூலகர்
- துணை பதிவாளர்
- ஜூனியர் கண்காணிப்பாளர்
- ஜூனியர் உதவியாளர்
- ஜூனியர் இந்தி உதவியாளர்
- ஜூனியர் தொழில்நுட்ப கண்காணிப்பாளர்
- ஜூனியர் தொழில்நுட்ப அலுவலர்
- உடற்பயிற்சியாளர்
கல்வித் தகுதி:
- துணை நூலகர் பணியிடத்திற்கு Library Science / Information Science / Documentation படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- துணை பதிவாளர் பணியிடத்திற்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீதம் மதிப்பெண் இருக்க வேண்டும். Finance & Accounts/ CA/ICWA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஜூனியர் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- ஜூனியர் உதவியாளர் பணிக்கு எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
- ஜூனியர் இந்தி உதவியாளர் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு Pay Level -12, Pay Level-6, Pay Level -3, Pay Level-5 என்ற வரைவுபடி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://iittp.plumerp.co.in/prod/iittirupati/staffrecruitment - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
- குரூப் ஏ பணிக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- குரூப் பி & சி பணிக்கு Objective- Based Test, எழுத்துத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தொடர்புக்கு .-- rmt_queries@iittp.ac.in
பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் - https://iittp.ac.in/pdfs/recruitment/2023/Detailed%20advertisement%20-%20Staff%2002-2023.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.09.2023
மேலும் வாசிக்க..
SBI PO Recruitment 2023: 2,000 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலைவாய்ப்பு; முழு விவரம்!