மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

TNPSC : தமிழ்நாடு அரசுப்பணி; ரூ.2.லட்சம் வரை மாத ஊதியம்; விண்ணப்பிக்க நாளையே கடைசி!

TNPSC Recruitment 2023 : ரூ.2.லட்சம் வரை மாத ஊதியத்துடன் தமிழ்நாடு அரசுப்பணி விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதியாகும்.

தமிழ்நாடு பொதுப் பணி துறையில் உள்ள சுற்றுலா அலுவலர் பதவிக்கான நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு இம்மாதம் 23- ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

சுற்றுலா அலுவலர்

மொத்த பணியிடங்கள் : 3

கல்வித் தகுதி: 

அரசு அங்கீகாரம் பெற்ற  கல்வி நிறுவனங்களில் பயணம் அல்லது சுற்றுலா துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுற்றுலா துறையில் முதுகலை அல்லது  M.Phil படித்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

சுற்றுலா பிரிவில் டிப்ளமோ படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி படிப்புகளில் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இந்தப் பணியிடங்கள் நிரப்புவதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஏனையோர்க்கு அதிகபட்ச வயதுவரம்பு 32 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

ஊதிய விவரம்: 

மாதம் ரூ.56,100 முதல் ரூ. 2,05,700  வரை ஊதியமாக வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: 

நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150

எழுத்துத் தேர்வு - ரூ.200

தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்: 

TNPSC :  தமிழ்நாடு அரசுப்பணி;  ரூ.2.லட்சம் வரை மாத ஊதியம்; விண்ணப்பிக்க நாளையே கடைசி!

ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

எழுத்துத் தேர்வு மையங்கள்:

இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்: 

TNPSC :  தமிழ்நாடு அரசுப்பணி;  ரூ.2.லட்சம் வரை மாத ஊதியம்; விண்ணப்பிக்க நாளையே கடைசி!

எப்படி விண்ணப்பிப்பது?

www.tnpscexams.in / www.tnpsc.gov.in- ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

TNPSC :  தமிழ்நாடு அரசுப்பணி;  ரூ.2.லட்சம் வரை மாத ஊதியம்; விண்ணப்பிக்க நாளையே கடைசி!

கவனிக்க

* தேர்வாணையத்தின்‌ தெரிவுகள்‌ அனைத்தும்‌ விண்ணப்பதாரரின்‌ தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.

*  பொய்யான வாக்குறுதிகளைச்‌ சொல்லி, தவறான வழியில்‌ வேலை வாங்கித்‌ தருவதாகக்‌ கூறும்‌ இடைத்தரகர்களிடம்‌ விண்ணப்பதாரர்கள்‌ மிகவும்‌ கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்‌.

* இது போன்ற தவறான மற்றும்‌ நேர்மையற்றவர்களால்‌ விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும்‌ எவ்வித இழப்புக்கும்‌ தேர்வாணையம்‌ எந்தவிதத்திலும்‌ பொறுப்பாகாது.

* இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும்‌ அனைத்துத்‌ தகவல்களுக்கும்‌ விண்ணப்பதாரரே முழுப்‌ பொறுப்பாவார்‌. விண்ணப்பதாரர்‌, தேர்விற்கு இணையவழியில்‌ விண்ணப்பிக்கும்பொழுது, ஏதேனும்‌ தவறு ஏற்படின்‌, தாங்கள்‌ விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ, பொதுச்‌

சேவை மையங்களையோ குற்றம்‌ சாட்டக்‌ கூடாது. விண்ணப்பதாரர்‌ பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும்‌ முன்னர்‌, நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்‌.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.02.2023

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://tnpsc.gov.in/Document/english/03_2023_TO_ENG.pdf-என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 : IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singhTiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Embed widget