TNPSC: 1089 காலிப் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு; முழு விவரத்திற்கு இதைப் படிங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரத்தை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நில அளவைப் பதிவேடுகள் சாரிநிலைப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதில் நில அளவர் மற்றும் வரைவாளர் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர்/ உதவி வரைவாளார் ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்க வரும் 27 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
பணி இடங்கள்: 1089
கல்வித் தகுதி:
சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ/ பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் அல்லது சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சில் வழங்கும் சான்றிதழ் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:
நில அளவர்/வரைவாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியின் கீழுள்ள அளவர்/ உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்:
தேர்வு கட்டணம் ரூ. 100;
பதிவுக் கட்டணம் : ரூ.150
எழுத்துத் தேர்வு:
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். கணினி தேர்வு வரும் நவம்பர், 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தில் முழு விவரங்களை தெரிவித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2022
அறிவிப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு.. https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்